கர்நாடக – ஆந்திர பகுதியில் லித்தியம் படிமங்கள் – பாரத அறிவியல் தொழில் ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு

கர்நாடக – ஆந்திர பகுதியில் லித்தியம் படிமங்கள் – பாரத அறிவியல் தொழில் ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு

Share it if you like it

பாரதத்தில் சில மாதங்கள் முன்பு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெருமளவு லித்தியம் படிவம் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டது. தற்போது ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் குறிப்பிட்ட செறிவில் லித்தியம் படிவம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதை பற்றிய அறிவிப்பை பாரத அறிவியல் தொழில் ஆராய்ச்சி நிறுவன தலைமை இயக்குனர் கலைச்செல்வி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன் மூலம் லித்தியம் தேவைக்கு இறக்குமதி ஒன்றே தீர்வு என்ற வகையில் உலக நாடுகளை நம்பி இருந்த பாரதத்தின் கடந்த கால நிலை எதிர்காலத்தில் நிச்சயம் மாறும்.

லித்தியம் தேவையில் சுயசார்பு எட்டுவதோடு அதன் ஏற்றுமதி வகையில் கணிசமான பொருளாதார பலமும் சர்வதேச அளவில் ஒரு பொருளாதார ஆளுமையாகவும் பாரதம் மேலும் பலப்படும். தற்போது லித்தியம் படிமங்கள் கையிருப்பு வைத்துள்ள வகையில் அர்ஜென்டினா பொலிவியா சிலி நாடுகள் முதல் மூன்று இடம் வகிக்கிறது. ஆனால் ஆந்திர – கர்நாடக பகுதிகளில் புதைந்திருக்கும் லித்தியம் படிமங்களின் அளவீட்டின் அடிப்படையில் தற்போது அர்ஜென்டினா பொலிவியா அடுத்த மூன்றாவது இடத்திற்கு பாரதம் உலக அளவில் முன்னேறியுள்ளது. ஏற்கனவே மூன்றாம் இடம் வகித்த சிலி நான்காம் இடம் போகிறது.

இந்த லித்தியம் படிமங்கள் அணு ஆராய்ச்சி முதல் ஆயுத கட்டுமானங்கள் போர்த்தளவாடங்கள் உற்பத்தி வரை பல்வேறு அத்தியாவசியம் துறைகளுக்கு முக்கிய மூலப்பொருளாக இருக்கிறது. இந்த லித்தியம் கனிமத்திற்கு இதுவரையில் பாரதம் உலக நாடுகளையே சார்ந்திருக்க வேண்டிய நிலை. இதன் காரணமாக லித்தியம் பயன்பாடு தவிர்க்க வேண்டும் ‌ இல்லையே அதை வேண்டி உலக நாடுகளை அனுசரித்து செல்ல வேண்டும் என்ற இக்கட்டான நிலை. தற்போது பரவலாக லித்தியம் படிமங்கள் பாரதத்தில் உறுதி செய்யப்படுவதால் எதிர்காலத்தில் பாரதத்தின் சுயசார்பும் ஆளுமையும் சர்வதேச அரங்கில் நிலைநிறுத்தப்படும்.

இந்த லித்தியம் படிமங்கள் கடந்த பல ஆண்டுகளில் மோடி பிரதமர் பதவிக்கு வந்த பிறகு அவரின் கட்சிக்காரர்கள் உருவாக்கியது இல்லை. வெளிநாடுகளில் இருந்து விலை கொடுத்து வாங்கியோ அபகரித்து வந்தோ பாரதத்தின் பூமிக்கு அடியில் ஒளித்து வைத்ததும் இல்லை. இவை பாரதத்தின் நிலப்பரப்பில் காலம் காலமாக இருக்கும் பொக்கிஷங்கள். ஆனால் பாரதத்தின் நிலப்பரப்பில் இந்த இந்த பொக்கிஷங்கள் இருக்கிறது. அவை இந்த இடத்தில் இந்த அளவில் இருக்கிறது என்பதை கண்டறியும் அளவில் கூட பாரதத்தின் அறிவியல் ஆய்வுகளும் அதற்குரிய அரசாங்கத்தின் பங்களிப்பும் கடந்த காலங்களில் இல்லை. அந்த சூழல் மாறி மோடி அரசில் அறிவியல் ஆய்வுகள் முழு உத்வேகம் பெற்றதன் வெளிப்பாடுதான் இந்த அடுத்தடுத்த இயற்கை வளங்களின் படிமங்கள் கண்டறியப்படுவதும் அதன் மூலம் பெறும் வளமும் பலமும் பாரதம் பெற்று வருவதுமான யதார்த்த நடைமுறை.

பூமிக்கு அடியில் இருக்கும் இந்த இயற்கை வளங்களை உரிய ஆய்வுகளின் மூலம் கண்டறியவும் அதன் அளவீடுகள் கிடைக்கும் ஆழங்கள் அதன் மதிப்பீடு உள்ளிட்டவற்றையெல்லாம் தெளிவாக தீர்க்கமாக முடிவு செய்யவும் பல ஆண்டுகள் பல கட்ட ஆய்வுகள் பரிசீலனைகள் ஒப்பீடுகள் தேவைப்படும். துறைசார் வல்லுனர்களின் குழுவான செயல்பாடு பல கட்ட ஆய்வுகள் சர்வதேச அளவிலான ஒப்பீடுகள் கடந்துதான் இந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட முடியும் .அந்த வகையில் மோடி அரசு பதவி ஏற்ற காலம் முதல் பாரதத்தின் அறிவியல் ஆய்வுகளுக்கும் விண்வெளி ஆய்வுப் பணிகளுக்கும் பெரும் பங்களிப்பும் ஒத்துழைப்பும் தேவையான உள் கட்டமைப்புகளும் மத்திய அரசின் மூலம் தடையின்றி கிடைத்தது.அதன் வெளிப்பாடுதான் இந்த அதிகாரப்பூர்வ ஆய்வின் முடிவுகள்.

சில மாதங்கள் முன்பு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லித்தியம் படிமங்கள் என்ற தகவல் தற்போது தென்னிந்திய அளவில் கர்நாடக ஆந்திர மாநிலங்களிலும் லித்தியம் படிமங்கள் கண்டறியப்பட்ட தாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியின் சுற்றுப்பகுதிகளில் கங்கை யமுனை படுகையில் பெருமளவு தங்கம் படிமங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அவை உரிய முறையில் வெட்டி எடுக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வருமானால் பாரதம் முழுமையான தங்க சுயசார்பை பெற முடியும். உலக நாடுகளின் வரிசையில் தங்க கையிருப்பில் முன் நிற்கும். இதன் மூலம் எதிர்காலத்தில் பாரதத்தின் தங்க கையிருப்பு அதிகரிப்பதோடு உள்நாட்டு தங்கத்தின் விலை குறையவும் சர்வதேச அளவில் தங்கத்தின் ஏற்றுமதியில் பாரதம் பெரும் பங்களிப்பை வழங்கவும் முடியும் என்ற தகவல் பாரதத்தை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

மறுபக்கம் புயல் வெள்ளங்கள் இயற்கை பேரிடர்கள் பற்றிய பெரும்பாலான கணிப்புகள் முன்கூட்டியே எச்சரிக்கை விடப்பட்டு அதற்குரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இதன் மூலம் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு பொருள் சேதங்கள் பேரிடர் கால இழப்புகளும் தடுக்க முடிகிறது. விண்வெளியில் சூரியன் ஆய்வு சந்திரன் ஆய்வு செவ்வாய் மண்டல ஆய்வு வரிசை கட்டி சாதிக்கிறது. அடுத்து ஆழ்கடலை ஆய்வு செய்ய சுமார் ஆறு கிலோமீட்டர் ஆழத்தில் ஆழ்கடலில் உயிரினங்கள் மற்றும் ஆழ்கடலின் இயற்கை வளம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய ஆறு பேர் அடங்கிய குழுவோடு மத்ஸயா என்ற ஆழ்கடல் ஆய்வுக் கலம் புறப்பட தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

தேவையான நிதி ஒதுக்கீடுகள் அவசியமான உள் கட்டமைப்புகள் பாதுகாப்பு பராமரிப்பு உள்ளிட்ட தேவைகளுக்கு முழு ஒத்துழைப்பு என்று அரச தரப்பில் இருந்து அனைத்து ஒத்துழைப்பும் கிடைக்கும் போது விஞ்ஞானிகள் மன நிம்மதியோடு முழு அர்ப்பணிப்போடு அவர்களின் ஆய்வு பணிகளை முன்னெடுக்க முடிந்தது. அதன் வெற்றி பலன் தான் தற்போதைய அடுத்தடுத்த விண்வெளி வெற்றி சாதனைகளும் ஆழ்கடல் பயணமும் பூமியின் ஆழ்பரப்பில் இருக்கும் கனிம வளங்களின் இருப்பு கண்டுபிடிக்கும் உறுதியான தகவல்கள் வெளியாகும் தேசத்தின் பெருமிதம்.

ஆனால் இதற்கெல்லாம் காரணமாக இருந்த விண்வெளி ஆய்வுகள் செயற்கைக்கோள் ஏவுதல் ஆய்வு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு இந்த விண்வெளி ஆய்வுகளுக்காக பூர்வாங்க பணிகள் செய்வது என்று மும்முறமாக மத்திய அரசும் பாரதத்தின் விஞ்ஞானிகளும் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருந்தபோது முதலில் எல்லோருக்கும் சோறிடுங்கள் . அப்புறம் செயற்கைக்கோள் ஏவி பெருமை பேசலாம் என்று மத்திய அரசை அவமதிப்பதாக எண்ணிக் கொண்டு தேசத்தையும் விஞ்ஞானிகளையும் ஒருசேர அவமதித்தார்கள்.

சந்திராயன் ஒன்று இரண்டு திட்டங்கள் துரதிஷ்டவசமாக எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காமல் பின்னடைவை சந்தித்தபோது அந்த தோல்வியை அவர்களின் சொந்த வெற்றியாக கொண்டாடி தீர்த்தார்கள். மறுபுறம் அந்தத் திட்டத்திற்கான ஒதுக்கப்பட்ட நிதி விஞ்ஞானிகளின் உழைப்பு அவர்களுக்கான ஊதியங்கள் என்று ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு அத்தனையும் வீண் தானா இதையெல்லாம் இவர்களிடம் இருந்தே அபராதமாக வசூலிக்க வேண்டும் என்றெல்லாம் கொச்சையாக பேசினார்கள் . நாங்களும் பாரதத்தின் குடிமக்கள் தான் கேள்வி கேட்க எங்களுக்கு முழு உரிமை உண்டு என்று இரவு பகலாக அர்ப்பணிப்போடு பல ஆண்டுகள் தேசியத்திற்காக உழைத்த பாரத விஞ்ஞானிகளை அவமதித்தார்கள்.

தோல்வியால் துவண்டு கிடந்த விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து இது உங்களின் தோல்வி அல்ல . ஒரு சிறு பின்னடைவு தான். நிச்சயம் இதிலிருந்து மீண்டு வருவோம். உங்களோடு தேசம் இருக்கிறது. எதிர்காலத்தில் நிச்சயம் நாம் இதை வெற்றிகரமாக சாதிக்க முடியும் என்று ஆறுதல் கூறி தேற்றிய பிரதமரை பார்த்து இதையெல்லாம் உங்கள் சொந்த பணத்தில் செய்தால் பரவாயில்லை . எவன் அப்பன் வீட்டு காசை எடுத்து இப்படி எல்லாம் ஊதாரியாக செலவு செய்வீர்கள் ? என்று கேள்வி கேட்டு அவமதித்தார்கள்.

ஆனால் இந்த விண்வெளி ஆய்வுகளும் செயற்கைக்கோள் ஏவுகையும் விண்கல ஆய்வுகளும் அதன் தரவுகளில் இருந்து உறுதி செய்யப்படும் ஆய்வு தகவல்களும் தான் சாதாரண தட்பவெப்ப ஆய்வு முதல் ராணுவத்தின் பாதுகாப்பு பணிகள் வரையிலும் பல்வேறு முக்கிய பங்களிப்பை வழங்குகிறது . இதை போகிற போக்கில் தேசத்தை இழித்து பேசும் அந்த அறிவிலிகள் உணர்வதில்லை. உணர்ந்தாலும் அவர்கள் திருந்த போவதில்லை. அவர்களை பொறுத்தவரையில் எல்லாவற்றையும் அரசு இலவசமாக கொடுக்க வேண்டும் . வரி விதிப்பு சட்ட சீர்திருத்தம் நடைமுறை திட்டம் மாறுதல் என்று ஆக்கபூர்வமாக எதையும் செய்யக்கூடாது. எந்த கேள்வியும் கேட்கக்கூடாது. தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்று ஊரை எடுத்து உலையில் போட்டாலும் சட்டம் ஒழுங்கு என்ற பெயரில் மத்திய மாநில அரசுகள் கேள்வி கேட்கக் கூடாது என்ற மலிவான மனநிலையில் வாழும் மட்டமான பிறவிகள் அவர்கள்.

அதனால் தான் இன்று மழை வரும் நாளை புயல் வரக்கூடும் என்ற எச்சரிக்கையின் அடிப்படையில் தான் பெரும்பாலான சேதங்கள் தவிர்க்கப்பட்டு கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் காரணமாக இருப்பது இந்த ஆய்வுகள் தான். அந்த ஆய்வுகளுக்கு போதிய நிதி ஒதுக்குவதும் அதை முன்னெடுப்பதும் மக்களின் நலன் கருதி தேசத்தின் பாதுகாப்பு கருதி தான் என்ற குறைந்தபட்ச அக்கறையும் புரிதலும் கூட இல்லாமல் தேசத்தை அவமதித்தார்கள். ஆனால் தேசம் இன்று அடுத்தடுத்த வெற்றிகளை அறிவியல் மற்றும் விண்வெளி துறையில் சாதிக்கும் போது அவர்கள் யாரும் இன்று இருக்கும் இடமே தெரியவில்லை.

ஜனநாயகம் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் விஷம கருத்துக்களை பேசுபவர்கள். கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு மத்திய அரசு என்ற ஒரு மாண்பு இருக்கிறது .தேசியம் என்ற ஒரு இறையாண்மை இருக்கிறது. தேசிய நிலைப்பாடு என்ற ஒரு சமூக பொறுப்பும் தேசிய கடமையும் நாம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அதை புரிந்து பொறுப்போடு நடந்து கொள்வது நம் கடமை என்ற உணர்வு இல்லாமல் போகிற போக்கில் அரசியல் பேசுகிறோம் என்ற பெயரில் தேசத்தை அவமதிப்பதையே தொழிலாகக் கொண்டவர்கள்.

அவர்கள் பிறந்த இதே தேசத்தில் தான் தங்களின் சொந்த குடும்பம் குழந்தைகள் சுகம் துக்கம் தனிப்பட்ட வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகள் என்று அத்தனையையும் மறந்து விட்டு பல ஆண்டுகள் உணவு உறக்கம் கூட மறந்து அர்ப்பணிப்போடு உழைக்கும் எண்ணற்ற விஞ்ஞானிகள் இந்த பாரதத்தில் பிறந்திருக்கிறார்கள் என்பதே பாரதத்தின் மகத்துவம் . பல கோடிகளில் ஊதியம் பெற்று வெளிநாடுகளில் பெருமிதமாக வாழும் வாய்ப்புகள் தேடி வரும் போதும் அவை அத்தனையும் உதறிவிட்டு சொந்த தேசத்தின் வெற்றிக்காகவும் எதிர்கால சந்ததிகளின் நலனுக்காகவும் உழைப்பவர்கள். தேசத்தின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு பாரதத்தின் வெற்றிக்காக உழைத்திட்ட ஒவ்வொரு விஞ்ஞானியும் பாரதத்தின் தேசிய பொக்கிஷங்களே.


Share it if you like it