தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்பு சட்டம் ஒழுங்கு என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது என பலர் வெளிப்படையாகவே கருத்து கூறும் அவல நிலை தமிழகத்தில் எழுந்து வருகிறது. முதல்வரின் எச்சரிக்கையையும் மீறி தி.முக அமைச்சர்கள், எம்எல்.ஏக்கள், எம்.பி மற்றும் அக்கட்சியின் முன்னோடிகள் என பலர் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருவது. மக்கள் மத்தியில் அச்சத்தையும், கோவத்தையும், ஏற்படுத்தி வருகிறது என்பது நிதர்சனம்.
தி.மு.க செய்யும் தவறுகளை மக்களுக்கு எடுத்து கூற வேண்டிய இடத்தில் உள்ள தமிழக ஊடகங்கள், தி.மு.க-வின் தீவிர ஆதரவாளர்கள் போல மாறி மக்களுக்கு உண்மை செய்திகளை தெரிவிக்காமல் மக்கள் கவனத்தை திசை திருப்பும் முயற்சியிலேயே இன்று வரை செயல்படுவதாக பலர் கருத்து கூறி வரும் நிலையில்.
பிரபல ஊடகமான புதிய தலைமுறையில் பணியாற்றி வரும் நெறியாளர் கார்த்திக்கை செல்வன் நேற்றைய தினம் விவாதம் ஒன்றினை நடத்தி இருந்தார். இதன் தலைப்பு என்னவெனில் இந்தி சர்ச்சை தனிப்பட்ட சம்பவமா? பொது மனநிலை வெளிப்பாடா? என்று விவாதம் நடத்தியுள்ளது. தமிழகத்தில் ஏராளமான பிரச்சனைகள் உள்ள நிலையில் சொமோட்டாவை கையில் எடுத்து கொண்டது ஏன்? என்று அவ்விவாதத்தில் கலந்து கொண்ட பிரபல அரசியல் விமர்சகர் ஸ்ரீராம் சேஷாத்திரி அவர்கள் நெறியாளரை கேள்வி எழுப்பியது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.