2019-ம் ஆண்டு லவ்ஜிகாத் மூலம் கடத்தப்பட்டு, மதம் மாற்றி, கட்டாயத் திருமணம் செய்து, கடந்த 4 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஹிந்து சிறுமியை, 4 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது பெற்றோர் மீட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் மன்சார் நகரில் வசித்து வந்தது ஹிந்து குடும்பம். கடந்த 2019-ம் ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வு எழுதச் சென்ற இக்குடும்பத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் போலீஸில் புகார் செய்தனர். ஆனாலும், போலீஸாரால் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. எனினும், மனம் தளராத அச்சிறுமியின் குடும்பத்தினர், பல்வேறு இடங்களில் தேடிவந்தனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ஜாவேத் ஷேக் என்பவன், லவ்ஜிகாத் மூலம் சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி கடத்திச் சென்றது தெரியவந்தது. ஆனாலும், அவன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், அச்சிறுமியின் சகோதரர் தனது நண்பர்களிடம் விவரத்தைச் சொல்லி, தனது சகோதரியை கண்டுபிடிக்க உதவுமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து, ஜாவேத் ஷேக்கின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க அவரது நண்பர்கள் பல்வேறு இடங்களிலும் தேடினர். அப்போது, ஒரு வீட்டில் ஜாவேத் ஷேக் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தனர். அப்போது, அந்த வீட்டில் புதிதாக ஒரு இளம்பெண் வந்திருப்பதாகவும், ஆனால் அப்பெண் ஜாவேத்தின் மனைவி என்றும் கூறியிருக்கிறார்கள். இதுதான் அச்சிறுவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் ஜாவேத் வீட்டிற்குச் சென்றனர். அப்போது, அச்சிறுமி புர்கா போட்டுக்கொண்டு, சித்தபிரமை பிடித்ததுபோல இருந்திருக்கிறார். பின்னர், அவரை தங்களது வீட்டிற்கு அழைத்து வந்த பெற்றோர், அச்சிறுமியிடம் விசாரித்தனர். அப்போதுதான், தான் கடத்தப்பட்டதாகவும், கட்டாயமாக மதம் மாற்றி திருமணம் செய்து, கடந்த 4 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. அதோடு, ஜாவேத்தின் தாய் மற்றும் அத்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும், அச்சிறுமியை அடித்து சித்ரவதை செய்ததோடு, சிகரெட்டால் உடல் முழுவதும் பல்வேறு இடங்களில் சூடு வைத்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, ஜாவேத் மீது போலீஸில் புகார் செய்யப்பட்டது. இதன் பேரில், ஜாவேத் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 363 (கடத்தல்) மற்றும் 376 (கற்பழிப்பு) மற்றும் போக்ஸோ சட்டத்தின் பிரிவுகள் 4, 6, 8, 10 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ஜாவேத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமியை பெற்றோர் கண்டுபிடித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.