அம்பேத்கருக்கு நிகர் மோடிதான்: இசைஞானி இளையராஜா புகழாரம்!

அம்பேத்கருக்கு நிகர் மோடிதான்: இசைஞானி இளையராஜா புகழாரம்!

Share it if you like it

அம்பேத்கருக்கு நிகர் பாரத பிரதமர் நரேந்திர மோடிதான் என்று இசைஞானி இளையராஜா கூறியிருப்பது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

புளூ கிராஃப் டிஜிட்டல் பவுண்டேஷன் நிறுவனம் “மோடியும் அம்பேத்கரும்: சீர்திருத்தவாதியின் சிந்தனையும், செயல்வீரரின் நடவடிக்கையும்” என்ற புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது. இந்த புத்தகமானது ஒரு சீர்திருத்தவாதியாக அம்பேத்கர் மற்றும் மோடியின் பங்களிப்பை ஒப்பிட்டுப் பேசுகிறது. இப்புத்தகத்திற்கு இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதியிருக்கிறார். அதில், “அம்பேத்கரை தெரிந்துகொள்வதைப் போல, அவரது கருத்தை அமல்படுத்துபவர்களையும் நாம் ஊக்கப்படுத்த வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் கீழ் நாட்டின் வளர்ச்சிப்பாதை, தொழில்துறை, சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம் போன்றவற்றில் அம்பேத்கரின் கருத்தும், சிந்தனையும் சந்திக்கும் இடத்தை இந்த புத்தகம் ஆய்வு செய்ய முயல்கிறது.

பிரதமரின் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் பல சாதனைகளைப் படைத்திருக்கிறது. சாலைகள், ரயில் பாதை, மெட்ரோ ரயில் மற்றும் அதிவேக சாலைகள் போன்ற உலகத் தரமான உட்கட்டமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. சமூக நீதி என்று வரும்பட்சத்தில், பல சட்டங்களைக் கொண்டு வந்தது, பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைத்தது போன்ற நடவடிக்கைகளால் சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சட்டப்பாதுகாப்பை வழங்கியிருக்கிறார். ஏழைகளுக்கு வீடுகள் மற்றும் கழிப்பிடங்கள் கட்டிக்கொடுத்து அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார். சமீபத்தில் பெண்களின் திருமண வயதை உயர்த்துவதற்கு மோடி அரசு முடிவெடுத்திருப்பதாக செய்திகளில் படித்தேன். இதனால் பெண்கள், குறிப்பாக கிராமப்புற பெண்கள் படிப்பைத் தொடர முடியும்.

பெண்கள் முன்னேற்றத்திற்காக மோடி மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து சிந்திக்கும்போது, இலவச எரிவாயு திட்டம் மற்றும் பெண் குழந்தைகளை பாதுகாப்பதற்காக சமூகத்திற்கு வழங்கியுள்ள செய்திகள்தான் நியாபகத்திற்கு வரும். ‘குழந்தைகளைக் காப்போம், குழந்தைகளுக்குக் கற்பிப்போம்’ என்ற திட்டம் மற்றும் முத்தலாக் முறைக்கு எதிரான சட்டம் ஆகியவை பெண்களின் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தை கண்டு அம்பேத்கரே பெருமைகொள்வார். ஆளுமைகளாக, அம்பேத்கரும் நரேந்திர மோடியும் ஒன்றுபடும் இடங்களையும் இந்த புத்தகம் சுட்டிக்காட்டுகிறது. இருவரும் ஏழ்மையையும், ஒடுக்குமுறையையும் அனுபவித்ததுடன், அதை ஒழிப்பதற்காகப் பாடுபட்டவர்கள். இருவரும் இந்தியா பற்றி பெரிதாகக் கனவு கண்டவர்கள். செயலின் மீது நம்பிக்கை கொண்டவர்கள்” என்று பாரத பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.

தமிழகத்தில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சித்தார்த், நடிகை ஜோதிகா போன்ற அரைவேக்காடுகள், பிரதமர் மோடியின் திட்டங்கள், செயல்பாடுகளைப் பற்றி முழுவதுமாகத் தெரிந்துகொள்ளாமல் வாய்க்கு வந்ததை எல்லாம் பிதற்றி வரும் நிலையில், இசைஞானி இளையராஜா தான் முதிர்ச்சியடைந்தவர் என்பதை இதன் மூலம் வெளிப்படுத்தி இருப்பதாக தேசநல விரும்பிகள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்கள். இசைஞானியின் இந்த கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், டெல்லி ஜன்பத்தில் அமைக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தை 2017-ம் ஆண்டு பிரதமர் மோடி திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது. மேலும், டாக்டர் அம்பேத்கரை கொண்டாடும் வகையில், அவரது பிறந்த நாளான நேற்று சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் பிறந்த குழந்தைகளுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோர் தங்க மோதிரத்தை பரிசாக வழங்கினார்கள்.

அதேசமயம், பாரத பிரதமர் மோடியை பாராட்டிப் பேசிய ஒரே காரணத்துக்காக இதுவரை இசைஞானி இளையராஜாவை புகழ்ந்து தள்ளிய திராவிட இயக்கங்கள், தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்ட கட்சியினரும், போலி போராளிகளும், இசைஞானியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

https://www.facebook.com/watch/?v=528140638708099&extid=NS-UNK-UNK-UNK-AN_GK0T-GK1C&ref=sharing


Share it if you like it