தாயம்மாள் சேவை: உலகம் அறிய செய்த பிரதமர்.. பாராட்ட மனமில்லாத ஸ்டாலின்..!

தாயம்மாள் சேவை: உலகம் அறிய செய்த பிரதமர்.. பாராட்ட மனமில்லாத ஸ்டாலின்..!

Share it if you like it

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தாயம்மாளின் சேவையை மன்கீ பாத் நிகழ்ச்சியின் மூலம் சுட்டிக்காட்டி உலகம் அறிய செய்த பிரதமர் மோடி.

பாரதப் பிரதமர் மோடி மனதின் குரல் (மன்கீ பாத்) என்னும் நிகழ்ச்சியின் மூலம் மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களிடம் உரையாற்றுவதை வழக்கமாக கொண்டு உள்ளார். தேசத்திற்கும், சமூகத்திற்கும், தங்களால் இயன்ற சேவைகளை செய்து வரும் மேன்மக்களை அடையாளம் கண்டு உலகம் அறிய செய்வதை நோக்கமாக கொண்டவர் பாரதப் பிரதமர் மோடி. அந்த வகையில்., திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தாயம்மாள் என்பவரின் சேவையை உலகம் அறிய செய்து உள்ளார் பாரதப் பிரதமர் மோடி.

இளநீர் கடையை நடத்தி வரும் தாயம்மாள். உடுமலைபேட்டை சின்னவீரம்பட்டி கிராம, பஞ்சாயத்தில் செயல்பட்டு கொண்டு இருக்கும். அரசு பள்ளியின் அவலநிலையை அறிந்து தாமாகவே முன்வந்து உதவியுள்ளார். இவர் தனது சேமிப்பில் இருந்த 1 லட்சம் ரூபாய் பணத்தை அப்பள்ளியின் வளர்ச்சிக்காக நன்கொடையாக வழங்கியுள்ளார். வறுமை நிலையில் இருந்தாலும் கூட ஏழை மாணவர்களின், நலனை கருதி இவர் செய்த உதவியை தான், பாரதப் பிரதமர் மோடி நேற்றைய தினம் (30.1.2022) மனதின் குரல் நிகழ்ச்சியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தாயம்மாளின் சேவையை அடையாளம் கண்டு உலகம் அறிய செய்த பாரதப் பிரதமர் மோடிக்கு. பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய நிதியமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்து உள்ளனர். வழக்கம் போல தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது மருமகன் மற்றும் அவரின் நண்பர்களுடன் இணைந்து. சைக்கிள் ஓட்டி அன்றைய பொழுதை நல்ல முறையில் கழித்து உள்ளார் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Image

Image

Share it if you like it