தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் மீண்டும் விளம்பரம் தேட முயன்ற சம்பவத்தை அடுத்து வ.உ.சி பேத்தியிடம் கடும் கண்டனம் பெற்ற சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டாலின் தலைமையில் தி.மு.க அரசு அமைந்த பின்பு, பா.ஜ.க செய்த சாதனைகளில் ஸ்டிக்கர் ஒட்டுவது. ஆர்.எஸ்.எஸ், சேவா பாரதி, பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் முந்தைய அதிமுக ஆட்சியாளர்கள் கொண்டு வந்த திட்டங்களில் விளம்பரம் தேட முயல்வது என்று விடியல் அரசு தொடர்ந்து சாதனைக்கு மேல் சாதனையை மேற்கொண்டு வருவதை தமிழக. மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாக இருந்த சமயத்தில். தினந்தோறும் 2,000 ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு தலா 50 லிட்டர் வீதம் எரிபொருள் வழங்க ரிலையன்ஸ் நிறுவனம் முன்வந்தது. அந்நிறுவனம் செய்த சேவையில், தமிழக முதல்வர் மற்றும் சுகாத்தாரத்துறை அமைச்சரின் புகைப்படங்கள் இடம் பெற்றதற்கு பொதுமக்கள் உட்பட பல சமூக ஆர்வலர்கள் தங்களது கடும் கண்டனங்ளை பதிவு செய்து இருந்தனர்.
அந்த வகையில், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில், 45 வயது மதிக்கதக்க பெண்மணி ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். அருகில் இருந்து கவனித்து கொள்ள யாரும் இல்லாத இவர் தான் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியின் கொள்ளு பேத்தி என்ற தகவல் வெளியாகியது. இதனை அடுத்து கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை எம்பி வெங்கடேசன் மற்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வ.உ.சி கொள்ளு பேத்திக்கு தேவையான உதவிகளை தாங்கள் செய்ததாக தங்களது ட்விட்டர் பக்கத்தில் தம்பட்டம் அடித்து கொண்டனர்.
இதற்கு வ.உ.சியின் கடைசி மகன் வாலேஸ்வரன் பிள்ளையின், மகள் மரகத மீனாட்சி. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருபவர். வ.உ.சியின் பேத்தியே கிடையாது. உண்மையை தன்மையை ஆராயாமல் வ.உ.சி பேத்தி என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுவது தவறு என்று தனது கடும் கண்டனத்தை பதிவு செய்து காணொளி ஓன்றினை வெளியிட்டு உள்ளார். அடுத்தவர் சேவையில் ஸ்டிக்கர் ஒட்டுவது அல்லது உண்மையை தன்மையை ஆராயாமல், வ.உ.சி. பேத்திக்கு உதவி செய்தேன் என்று விளம்பரம் தேடிய அமைச்சருக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்று மக்கள் சிரிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.