‘நான் உனை நீங்க மாட்டேன்…’ உ.பி.ஸ்களை தொடர்ந்து கதறவிடும் இசைஞானி!

‘நான் உனை நீங்க மாட்டேன்…’ உ.பி.ஸ்களை தொடர்ந்து கதறவிடும் இசைஞானி!

Share it if you like it

மோடிக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்ததால் உ.பி.ஸ்களின் கடும் கண்டனத்துக்கு ஆளான இசைஞானி இளையராஜா, எப்போதும் எனது ஆதரவு மோடிக்குத்தான் என்பதுபோல ‘நான் உனை நீங்க மாட்டேன்…’ என்ற பாடல் வரிகளை தனது ட்விட்டரில் போட்டு, உ.பி.ஸ்களை மீண்டும் கதற விட்டிருக்கிறார்.

டெல்லியிலுள்ள புளூகிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேசன் என்கிற நிறுவனம், ‘மோடியும் அம்பேத்கரும்:: சீர்திருத்தவாதியின் சிந்தனையும் செயல்வீரரின் நடவடிக்கையும்’ என்கிற பெயரில் ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது. இப்புத்தகம் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14-ம் தேதி வெளியிடப்பட்டது. இப்புத்தகத்திற்கு இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதி இருக்கிறார். அதில், பிரதமர் மோடி, அம்பேத்கருக்கு இணையானவர் என்றும், பிரதமர் மோடி ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு திட்டங்கள் அம்பேத்கரின் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டவை என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், முத்தலாக் தடைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் மூலமாக நிகழ்ந்த சமூக மாற்றங்களை நினைத்து அம்பேத்கர் பெருமைப்பட்டிருப்பார்” என்றும் கூறியிருந்தார்.

உடனே களத்தில் குதித்த உ.பி.ஸ்களும், போலி போராளிகளும் அம்பேத்கருடன் எப்படி மோடியை ஒப்பிடலாம் என்று சொல்லி, இளையராஜாவுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கம்பு சுற்றினர். மேலும், இசைஞானியின் ஜாதியை சுட்டிக்காட்டி மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்தனர். இதற்கு மூத்த அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் என பாகுபாடின்றி அனைவரும் இளையராஜாவுக்கு ஆதரவாக இருந்தனர். மேலும், இளையராஜாவை யாரும் விமர்சிக்க வேண்டாம் என்றும் கருத்துத் தெரிவித்து வந்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே, இசைஞானி தன்னைப் பற்றி எழுதி இருப்பதை அறிந்த பாரத பிரதமர் மோடி, இளையராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்தார். இந்த நிலையில்தான், எனது ஆதரவு எப்போதும் மோடிக்குத்தான் என்பதுபோல தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பாடலை பதிவிட்டிருக்கிறார் இளையராஜா. ரஜினி நடித்த தளபதி படத்திலிருந்து “சுந்தரி கண்ணால் ஒரு சேதி என்ற பாடலின், ‘நான் உன்னை நீங்க மாட்டேன், நீங்கினால் தூங்க மாட்டேன். பாடுவேன் உனக்காகவே. இந்த நாள் நன்னாள் என்று பாடுவேன். என்னதான் இன்னும் உண்டு என்று கூறு’ என்ற வரிகளை தானே பாடி வீடியோவாக பதிவிட்டிருக்கிறார். இளையராஜாவின் இந்த ட்வீட்டுக்கும் உ.பி.ஸ்கள் கதறி வருகின்றனர்.

என்ன ராஜா, இப்படி பண்றீங்களே ராஜா!

கடந்த 3 ஆண்டுகளாக பல மறைக்கப்பட்ட வரலாறுகள், சொல்லப்படாத உண்மை செய்திகள் உங்களிடம் கொண்டு வந்து சேர்த்ததில் மீடியான் பெருமை கொள்கிறது. இப்பணி சிறப்பாக, தரமாக தொடர உங்கள் ஆதரவு அவசியம். மீடியான் குடும்பத்தின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு கரம் சேர்ப்போம்.


Share it if you like it