அந்தமான், நிகோபாரில் உள்ள பெயரிடப்படாத தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது வென்றவர்களின் பெயரை பிரதமர் மோடி சூட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதப் பிரதமர் மோடி ராணுவ வீரர்கள் மீது மிகுந்த அன்பும், மரியாதையையும் கொண்டவர். அதே வேளையில், தேசப்பற்று மிகுந்த தலைவர் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. தீபாவளி உள்ளிட்ட முக்கிய பண்டிகைகளை இந்திய ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை தனது கொள்கையாக கொண்டவர். அதேபோல, ராணுவ வீரர்களின் தியாகத்தை இன்று வரை நினைவு கூர்ந்து வருகிறார்.
இந்நிலையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் ( பிறந்த நாள் ) பராக்கிரம தினமாக நாளை அனுசரிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து, அந்தமான், நிகோபாரில் உள்ள 21 தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது வென்றவர்களின் பெயர் சூட்டும் விழா நாளை நடைபெறுகிறது. இந்த விழாவில், பாரதப் பிரதமர் மோடி காணொளி வாயிலாக கலந்து கொண்டு பெயர் சூட்டுகிறார்.
அந்தமான், நிகோபார் தீவுகளின் வரலாற்று முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இந்திய தேசத்தின் மிகப்பெரிய விடுதலைப் போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திர போசின் நினைவை போற்றும் விதமாக ராஸ் தீவுக்கு ( கடந்த 2018- ம் ஆண்டு) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு என பிரதமர் மோடி புதிய பெயரை சூட்டி இருந்தார். இந்த நிலையில்தான், மேலும் 21 தியாகிகளின் பெயர் சூட்டும் விழா நாளை நடைபெறுகிறது.
எதிரி நாட்டு படைகளிடம் தங்களது வீரத்தையும், தன்னலமற்ற தியாகத்தையும் காட்டிய படை வீரர்களுக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது அவர்களது மரணத்துக்கு பின்பு கிடைக்கும் என்பது கூடுதல் தகவல்.