பாரதப் பிரதமர் மோடி மீது உள்ள வன்மத்தால் இந்தியாவை அவமதித்த முன்னணி ஊடகங்கள்.
தமிழகத்தின் இரண்டாவது சன் நியூஸ் ஊடகமாக இன்று வரை செயல்பட்டு கொண்டு இருக்கும் நியூஸ்-7 போன்ற பல முன்னணி ஊடகங்கள் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பாரதப் பிரதமர் மோடி, மீது தமிழக மக்களுக்கு தவறான எண்ணத்தை உருவாக்கும் மத்திய அரசு கொண்டு வரும் பல நல்ல திட்டங்களை மக்கள் மத்தியில் தவறாக எடுத்துக்காட்டவுமே இவர்கள் ஊடகங்களை நடத்தி வருவதாக நெட்டிசன்கள் உட்பட பலரும் வெளிப்படையாகவே இன்று வரை இந்த ஊடகங்களின் செயல்பாடு உள்ளது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.
பிரபல ஆங்கில நாளிதல் தி ஹிந்து பத்திரிக்கை சமீபத்தில் கட்டுரை ஒன்றினை வெளியிட்டு இருந்தது. அதில் கூறப்பட்ட செய்திகளை பலவற்றை மறைத்து அதில் சில வார்த்தைகளை திரித்து செய்தியாக வெளியிட்டு உள்ளது சன் நியூஸ், நியூஸ்-7 ஊடகம்.
‘இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு பயணம் செய்ய வேண்டாம்’; குற்றம் மற்றும் பயங்கரவாதம் காரணமாக எச்சரிக்கையாக இருங்கள் என தனது குடிமக்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை வலியுறுத்தி கேட்டு கொண்டு உள்ளது. மேலும் அந்த கட்டுரையில் கூறப்பட்ட பல வார்த்தைகளை மாற்றி சன் நியூஸ், நியூஸ்- 7 தனது மோடி வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளதாக நெட்டிசன்கள் தங்கள் கோவத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

