பாரதப் பிரதமரின் எழுச்சியுரை!

பாரதப் பிரதமரின் எழுச்சியுரை!

Share it if you like it

பாரதப் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து தமது எழுச்சியுரையை நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

75-ஆம் ஆண்டு சுந்திரதினம் நிறைவு பெற்று, 76-வது ஆண்டு சுந்திர தினத்தையொட்டி மகாத்மா காந்தி மற்றும் மிக முக்கிய தலைவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் பாரதப் பிரதமர் மோடி. இதையடுத்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பின்பு செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார். அதன்பின்னர், பிரதமர் மோடி ஆற்றிய உரையின் தொகுப்பு இதோ.

ஜனநாயகத்தின் பிறப்பிடம் இந்தியா. உங்களில், ஒருவனாக இருந்து நான் பெற்ற அனுபவங்களை நாட்டிற்காக உபயோகப்படுத்தி வருகிறேன். இதுவரை 200 கோடி தடுப்பூசிகள் செலுத்தி நாம் சாதனை படைத்துள்ளோம். நாடு பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறி வருகிறது. பாரதியார், வேலு நாச்சியார், பகத்சிங் உள்ளிட்ட புரட்சியாளர்களுக்கு நாடு நன்றி செலுத்துகிறது. ஜனநாயகத்தின் தாய் இந்தியா என்பதை நாம் உறுதி செய்துள்ளோம். 75 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் பல்வேறு ஏற்ற, இறக்கங்களை நாம் கண்டிருக்கிறோம். 8 ஆண்டுகளுக்கு முன் நாட்டை வழிநடத்தும் பொறுப்பு எனக்கு கிடைத்தது. கடைசி குடிமகனுக்கும் அரசின் சலுகைகள் சென்றுசேரும் என்பதில் தமது அரசு உறுதியாக உள்ளது. காந்தியின் கனவை அடைவதே எனது குறிக்கோள். அனைவருக்கும் நல்லாட்சி அனைவருக்கும் வளர்ச்சி என்ற இலக்குடன் பயணித்து  வருகிறோம்.

ஊழல், வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் சிறையில் இருந்து வந்து தலைமை பொறுப்புகளை ஏற்கின்றனர். குடும்ப நலன் என்பது அரசியலில் மட்டும் இல்லை, நாட்டின் ஒவ்வொரு துறையிலும் உள்ளன. குடும்ப நலம் என்ற மோசமான விஷயத்தால் நாட்டில் பல திறமையானவர்கள் பாதிக்கப்படுகின்றனர். குடும்ப நலம், குடும்ப அரசியல் என்ற விஷயம்தான் ஊழலுக்கு வழிவகுக்கிறது. ஒருபக்கம் வீடே இல்லாத மக்கள், இன்னொரு பக்கம் திருடிய பொருளை எங்கே? வைப்பது என தெரியாத மக்கள். ஊழலுக்கு எதிராக பலமான நடவடிக்கை எடுக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.

மக்களின் ஆசீர்வாதத்தால்தான் ஊழலுக்கு எதிரான போரில் வெற்றிபெற முடியும். ஊழலுக்கு, எதிராக நடவடிக்கை எடுக்க மக்கள் ஆசீர்வாதம் தர வேண்டும். நாட்டு மக்கள் அனைவரும் நாட்டின் வளர்ச்சிக்கு தங்கள் பங்களிப்பை அர்ப்பணிக்க வேண்டும். சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் ஆகும் போது நமது முக்கிய குறிக்கோள்களை அடைந்து காட்ட வேண்டும். என்னுடன் சேர்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள், அனைவரும் ஒன்றாக சேர்ந்து முன்னேறுவோம். நமது குறிக்கோள்கள், எண்ணங்கள் பெரிதாக இருக்க வேண்டும். கனவுகளை நனவாக்கக் கூடிய காலம் இது, அடிமைத்தனத்தை முழுவதுமாக நாம் வேரறுக்க வேண்டும். நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும். நமது பாரம்பரியத்தின் மீது நாம் பெருமைப்பட வேண்டும். கர்வத்துடன் பாரம்பரியத்தை நாம் பாதுகாக்க வேண்டும்.

அடுத்த, 25 ஆண்டுகள் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமானது, பெரிய இலக்குகளை நிர்ணயிப்பது மட்டுமே இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும். 2047-க்குள் சுந்திர போராட்ட வீரர்களின் கனவுகளை நாம் நனவாக்க வேண்டும். ஒவ்வொரு இல்லத்திலும் தேசியக் கொடியை ஏற்றி மக்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளனர். ஒருங்கிணைந்த உணர்வுதான் இந்தியாவின் பலம், புதிய இந்தியாவிற்கு இதுதான் அடிப்படை என பாரதப் பிரதமர் மோடி தமது எழுச்சியுரை நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it