பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை மேற்கோள் காட்டி சத்தியம் டிவி நெறியாளரை வெளுத்து வாங்கி இருக்கிறார் நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.
சத்தியம் டிவி ஊடக நெறியாளராக இருப்பவர் முக்தர் அகமது. இவரது, பேட்டிகள், விருந்தினர்களிடம் கேட்கும் கேள்விகள் ஆபாசமாகவும், அருவருக்கதக்க வகையிலும் இருக்கும். அதனை உறுதிப்படுத்தும் விதமாக, திருச்சி சூர்யாவிடம், அண்மையில் இவர் கண்ட பேட்டி பெண்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து, சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்ததை தொடர்ந்து அக்காணொளி நீக்கப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகையுமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் சத்தியம் டிவிக்கு பேட்டியளித்து இருக்கிறார்.
அந்த பேட்டியில், திரைத்துறையை சார்ந்த கேள்விகளை முன்வைக்காமல் பா.ஜ.க. குறித்து பல்வேறு கேள்விகளை நெறியாளர் முக்தார் முன்வைத்ததாக சொல்லப்படுகிறது. அந்தவகையில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை பா.ஜ.க.வில் இருந்து நான் விலகுகிறேன் என லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளதாக சத்தியம் டி.வி. தலைப்பு வைத்து அக்காணொளியை வெளியிட்டு இருக்கிறது.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், நான் பா.ஜ.க.வில் சேரவே இல்லை. அப்புறம் எப்படி வெளியே வர முடியும்? இதுதான் இன்றைய பத்திரிகையின் தரம், திரித்து, தவறாக மேற்கோள் காட்டுவது. தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சொல்வது சரிதான், சில ஊடகங்கள் ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்ளாத வரை மற்றவர்களைக் கேள்வி கேட்கும் தகுதி அவர்களுக்கு இல்லை என சத்தியம் டிவி நெறியாளரான முக்தாரை வெளுத்து வாங்கி இருக்கிறார்.