6 அடி இருந்தா மட்டும் வாங்கு… விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் தி.மு.க.!

6 அடி இருந்தா மட்டும் வாங்கு… விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் தி.மு.க.!

Share it if you like it

பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்களுக்கு வழங்குவதற்காக கரும்பு கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில், 6 அடி இருந்தா மட்டும் வாங்கு என்று தி.மு.க. அரசு உத்தரவிட்டிருப்பது, தங்களது வயிற்றில் அடிக்கும் செயல் என்று விவசாயிகள் குமுறி வருகிறார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன், பணமும் வழங்குவது வாடிக்கையாக இருந்து வந்தது. ஆனால், கடந்தாண்டு ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு, 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டுமே வழங்கியது. பணம் வழங்கவில்லை. அதோடு, பொங்கல் பரிசும் தரமற்றதாக இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக தி.மு.க. அரசு அறிவித்தது. ஆனால், எந்த நிறுவனத்தின் மீதும் இதுவரை நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.

இந்த சூழலில், நிகழாண்டு பொங்கல் பண்டிகை நெருங்கி விட்டது. இதையொட்டி, பொங்கல் பண்டிகைக்கு என்னென்ன பொருட்கள் வழங்கலாம் என்பது குறித்து தலைமைச் செயலகத்தில் கடந்த டிசம்பர் மாதம் 20-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும் கடந்தாண்டு வழங்கிய பொருட்கள் தரமற்றதாக இருந்ததால் மக்களின் அதிருப்தியை சந்தித்ததால் நிகழாண்டு பணமாக வழங்கலாம் என்று ஆலோசனை கூறியிருக்கிறார்கள். ஆகவே, நிகழாண்டு பொருட்கள் வழங்காமல் பணமாக வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

அதன்படி, தமிழகத்திலுள்ள ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா 1 கிலோ அரசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் 1,000 ரூபாய் ரொக்கம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து, பொங்கலுக்குத் தேவையான அரசி, சர்க்கரை, கரும்பு ஆகியவை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த கொள்முதலில்தான் கரும்பை பொறுத்தவரை, 6 அடி உயரம் இருந்தால் மட்டுமே வாங்க வேண்டும் என்றும், 6 அடிக்கு குறைவான கரும்பை கொள்முதல் செய்ய வேண்டாம் எனவும் தமிழக அரசுத் தரப்பில் இருந்து வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அதிகாரிகளும் 6 அடி உயரம் இருக்கும் கரும்பை மட்டும் தேடித் தேடி கொள்முதல் செய்து வருகின்றனர். இதுதான் விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. பயிர்களை பொறுத்தவரை ஒவ்வொரு இடத்திலும் இருக்கும் தட்பவெட்ப நிலை, நீர்நிலை ஆதாரம், மண்ணின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்துத்தான் வளரும். உதாரணமாக, நமது கைகளில் இருக்கும் விரல்களே ஒரே மாதிரி இல்லை. அப்படி இருக்கையில் எல்லாக் கரும்பும் எப்படி ஒரே உயரத்தில் இருக்கும். மேலும், கரும்பை நாங்களா வளரக் கூடாது என்று சொல்கிறோம் என்று ஆவேசமாக கூறிவருகின்றனர்.

இந்த சூழலில், கடலூர் மாவட்டத்தில் கரும்பு கொள்முதலுக்குச் சென்ற மாவட்ட கலெக்டர், கையில் டேப்புடன் அதிகாரிகளை வரச்சொல்லி ஒவ்வொரு கரும்பையும் அளந்து பார்த்து வாங்கும்படி அறிவுறுத்தி இருக்கிறார். இந்தக் காட்சிகளை விவசாயிகளில் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதைப் பார்த்து விட்டு பலரும், அடப்பாவிகளா, அளந்து பார்த்து கரும்பை வாங்குவதெல்லாம் விவசாயிகளுக்கு செய்யும் துரோகம் என்று தி.மு.க. அரசை வசைபாடி வருகின்றனர்.


Share it if you like it