ஹிந்துக்களை சீண்டும் வகையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அவதூறு பிரச்சாரம் மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு அடிப்படைவாத அமைப்பு என பலர் கூறி வருகின்றனர். அதனை உறுதிப்படுத்தும் விதமாக அந்த அமைப்பின் செயல்பாடுகள் தொடர்ந்து இருக்கின்றன. அந்த வகையில், கர்நாடக நீதிமன்ற நீதிபதிக்கு தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்த நிர்வாகி கொலை மிரட்டல் விடுத்த காணொளியை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்தவர்கள் பெண்ணுரிமை போற்றும் இஸ்லாம் என்ற துண்டு பிரசுரங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொகுதியில் நேற்றைய தினம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர். அந்த துண்டு பிரசுரத்தில் ஹிந்து மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் பல்வேறு வாசகங்கள் இடம் பெற்று இருந்தன. தவ்ஹீத் அமைப்பின் இந்த இழிவான செயலுக்கு சமூக ஆர்வலர்கள், ஹிந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.