நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த ஸ்டாலின்… தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கும் அபாயம்!

நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த ஸ்டாலின்… தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கும் அபாயம்!

Share it if you like it

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட 8 மாநில முதல்வர்கள் புறக்கணித்திருக்கிறார்கள். இதனால், மாநிலங்களுக்குத்தான் இழப்பு என்று கூறப்படுகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு அமைந்த பிறகு, மத்திய திட்டக் கமிஷனுக்கு மாற்றாக ‘நிதி ஆயோக்’ என்கிற அமைப்பு கொண்டு வரப்பட்டது. இதன் தலைவராக பிரதமர் மோடி இருக்கிறார். இந்த ஆட்சி மன்றக் குழுவில், அனைத்து மாநிலங்களின் முதல்வர்களும், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுனர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். இக்குழுவின் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. அந்த வகையில், நிகழாண்டுக்கான இக்குழுவின் கூட்டம் இன்று நடக்கிறது. இக்கூட்டத்தில்தான், தமிழகம், கேரளா, டெல்லி, பஞ்சாப், கர்நாடகா, பீகார், ராஜஸ்தான், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் கலந்துகொள்ளவில்லை.

இந்த நிலையில்தான், இக்கூட்டத்தை புறக்கணிப்பது மாநிலங்களில் வளர்ச்சியை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. காரணம், மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவது இந்த அமைப்புதான் என்பதோடு, இக்கூட்டத்தில்தான் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்த விவாதங்களும் நடைபெறும். மேலும், இக்கூட்டத்தில் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் நோக்கத்துடன், சுகாதாரம், திறன் மேம்பாடு, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பான பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். அப்படி இருக்க, இக்கூட்டத்தை புறக்கணித்திருப்பது மாநிலங்களை பாதிக்கும் என்கிறார்கள்.


Share it if you like it