சிஏஏ சட்டத்தை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை : சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டேன் எனக் கூற மாநிலங்களுக்கு உரிமை இல்லை – அமித்ஷா !

சிஏஏ சட்டத்தை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை : சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டேன் எனக் கூற மாநிலங்களுக்கு உரிமை இல்லை – அமித்ஷா !

Share it if you like it

குடியுரிமை என்பது மத்திய அரசின் கீழ் வருவதால், சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டேன் எனக் கூற மாநிலங்களுக்கு உரிமை இல்லை’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து, நம் நாட்டுக்குள் அகதிகளாக வந்த அந்தந்த நாட்டு சிறுபான்மையினருக்கு, குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா 2019ல் அறிமுகம் செய்யப்பட்டது. இம்மசோதா பார்லிமென்டின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலும் பெறப்பட்டது. இந்த சட்டம் சில நாட்களுக்கு முன்புதான் அமல்படுத்தப்பட்டது.
இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) திரும்பப்பெற எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அதேபோல், தமிழக முதல்வர் ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் தங்கள் மாநிலங்களில் சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் எனக் கூறி வருகின்றனர். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது:

சிஏஏ சட்டத்தை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை. எதிர்க்கட்சியினர் எல்லாவற்றையும் அரசியலாக பார்க்கின்றனர். இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) திரும்பப்பெற எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அதேபோல், தமிழக முதல்வர் ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் தங்கள் மாநிலங்களில் சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் எனக் கூறி வருகின்றனர். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது: சிஏஏ சட்டத்தை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை. எதிர்க்கட்சியினர் எல்லாவற்றையும் அரசியலாக பார்க்கின்றனர்.

சிஏஏ சட்டத்தைக் கண்டு சிறுபான்மையினர் அஞ்ச வேண்டாம் என நானே பலமுறை கூறியிருக்கிறேன். சிஏஏ குறித்து 2019ம் ஆண்டு தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம். கொரோனா தொற்று காரணமாகவே சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டேன் எனக் கூற மாநிலங்களுக்கு உரிமை இல்லை. குடியுரிமை என்பது மத்திய அரசின் கீழ் வருவதால் மாநிலங்களுக்கு உரிமை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Share it if you like it