இராணுவ ஆட்சேர்ப்பு நடைமுறையில் சில மாற்றம் அறிவிப்பு | Indian Army | Agniveer | Agnipath

இராணுவ ஆட்சேர்ப்பு நடைமுறையில் சில மாற்றம் அறிவிப்பு | Indian Army | Agniveer | Agnipath

Share it if you like it

ஆன்லைன் பொது நுழைவுத்தேர்வுடன் ஜூனியர் கமிஷன் அதிகாரிகளுக்கான புதிய ஆட்சேர்ப்பு நடைமுறை. இந்திய ராணுவம் ஜூனியர் கமிஷன் அதிகாரிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறையில் மாற்றங்களை அறிவித்துள்ளது. நிலை 1 இல், joinindianarmy.nic.in என்ற இணையத்தளம் மூலம் ஆன்லைனில் பதிவு செய்து விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பதாரர்களும் பொது நுழைவுத் தேர்வுக்கு உட்படுத்தப்படுவார்கள்.


நிலை 2 இல், பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் உடல் தகுதித் தேர்வுகள் மற்றும் உடல் அளவீடுகள் சோதனைகளுக்காக அந்தந்த ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தால் தீர்மானிக்கப்பட்ட இடங்களில் ஆட்சேர்ப்பு பேரணிக்கு அழைக்கப்படுவார்கள். இறுதியாக 3 ஆம் கட்டத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் பேரணி நடைபெறும் இடத்தில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.


ஆன்லைன் பதிவு


இந்திய ராணுவத்தின் ஆட்சேர்ப்பு இணையதளமான ஜே.ஐ.ஏ (JIA) இணையதளத்தில் பிப்ரவரி 16 முதல் மார்ச் 15ம் தேதி வரை ஆன்லைன்பதிவு செய்யலாம். ஆன்லைன் பதிவு செயல்முறையில் எந்த மாற்றமும் இல்லை.


விண்ணப்பதாரர்கள் தங்களின் ஆதார் அட்டை அல்லது 10 ஆம் வகுப்பு சான்றிதழை பயன்படுத்தி பதிவு செய்யலாம். தொடர்ச்சியான ஆட்டோமேஷனின் ஒரு பகுதியாக, இந்திய ராணுவத்தின் ஜே.ஐ.ஏ இணையதளம் இப்போது அதிக வெளிப்படைத்தன்மைக்காக டிஜிலாக்கருடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் பொது நுழைவுத்தேர்வு இந்தியா முழுவதும் 176 இடங்களில் நடத்தப்படுகிறது. தேர்வு எழுதுபவர்கள் ஐந்து தேர்வு மையங்களை தேர்ந்தெடுக்கலாம். அதில் ஒரு இடம் அவர்களுக்கு ஒதுக்கப்படும். ஆன்லைன் நுழைவுத்தேர்வுக்கான கட்டணம் ரூ 500. இதில் 50% செலவை ராணுவம் ஏற்கிறது. பதிவு செயல்முறையின் முடிவில் விண்ணப்பதாரர்கள் ரூ. 250/-ஐ செலுத்த வேண்டும்.


இன்டர்நெட் பேங்கிங், யுபிஐ/பி.எச்.ஐ.எம் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்தலாம். அனைத்து பெரிய வங்கிகளை சேர்ந்த Maestro, Master Card, VISA அல்லது RuPay கார்டுகளை ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு விண்ணப்பதாரர்கள் பயன்படுத்தலாம்.
விண்ணப்பதாரர்கள் பணம் செலுத்தியவுடன் மட்டுமே பதிவு செய்யப்பட்டதாகக் கருதப்படுவார்கள்.


வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டவுடன் விண்ணப்பதாரர்களுக்கு பதிவு எண் வழங்கப்படும். இது அனைத்து நிலைகளிலும் பயன்படுத்தப்படும்.
“எப்படி விண்ணப்பிப்பது” என்ற முழுமையான செயல்முறை ஜே.ஐ.ஏ இணையத்தளத்தில் உள்ள வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது. இது யூடியூபிலும் கிடைக்கிறது.
ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வு (CEE) ஆன்லைன் பொது நுழைவுத்தேர்வில் தோன்றுவதற்கு, முன் அனுமதி அட்டைகளை தேர்வு தொடங்குவதற்கு 10-14 நாட்களுக்கு முன் ஜே.ஐ.ஏ இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும். இதுகுறித்த தகவல், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்படும். அனுமதி அட்டையில் தேர்வு மையத்தின் சரியான முகவரி இருக்கும்.


ஆன்லைன் நுழைவுத் தேர்வு என்பது கணினி அடிப்படையிலான தேர்வு. இதற்கு தயாராகும் செயல்முறை மிகவும் எளிமையானது. தேர்வர்களுக்கு வழிகாட்டும் வகையில், ‘எப்படி ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வில் தோன்றுவது’ என்ற வீடியோ ஜே.ஐ.ஏ இணையத்தளம் மற்றும் யூடியூபில் உள்ளது. அதில் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வுமுறையில் எந்த மாற்றமும் இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் நுழைவுத்தேர்வுக்கு வேட்பாளர்கள் தயாராவதற்கு உதவ, பயிற்சி தேர்வுக்கான இணைப்பு ஜே.ஐ.ஏ இணையத்தளத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விண்ணப்பதாரர்கள் மேற்படி பரீட்சைக்காக தங்கள் வீடுகளில் இருந்தே பயிற்சி பெறலாம். இந்த பயிற்சி தேர்வுகளை மொபைல் மூலமாகவும் அணுகலாம்.


ஆட்சேர்ப்பு பேரணி


ஆன்லைன் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆட்சேர்ப்பு பேரணிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட இடங்களுக்கு அழைக்கப்படுவார்கள். ஆட்சேர்ப்பு பேரணிகளுக்கான செயல்முறையில் எந்த மாற்றமும் இல்லை. நுழைவுத்தேர்வு மதிப்பெண் மற்றும் உடல் பரிசோதனை மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும்.


உதவி மையம்


விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களைத் தெளிவுபடுத்த, உதவி மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்கள் ஜே.ஐ.ஏ இணையதளத்தில் உள்ளன. ஆன்லைன் நுழைவுத்தேர்வு தொடர்பான கேள்விகளுக்கு எண் 7996157222ல் தொடர்பு கொள்ளலாம்.
நன்மைகள். மாற்றப்பட்ட செயல்முறை, ஆட்சேர்ப்பின் போது மேம்பட்ட அறிவாற்றலில் கவனம் செலுத்தும். இதனால் நாடு முழுவதும் பரந்த மற்றும் சிறந்த வெளிப்பாடு கிடைக்கும். மேலும் இது ஆட்சேர்ப்பு பேரணியில் பெரும் கூட்டம் கூடுவதையும் அதில் உள்ள நிர்வாக ஏற்பாடுகளையும் குறைக்கும். இந்த செயல்முறை மேலும் நெறிப்படுத்தப்பட்டு, விண்ணப்பதாரர்கள் தோன்றுவதற்கு எளிதாகவும், நாட்டின் நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் ஒருங்கிணைக்கவும் உதவும்.
போலி விளம்பரங்கள். தற்போது ஆட்சேர்ப்பு செயல்முறை அதிக மனித தலையீடு இல்லாமல் தானியங்கி முறைக்கு மாறிவிட்டது. இதனால் விண்ணப்பதாரர்கள் போலி விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்திய ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு பக்கச்சார்பற்ற, பாரபட்சமற்ற மற்றும் தகுதி அடிப்படையில் நடைபெறும்.


“ஜெய் ஹிந்த்”


Share it if you like it