என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்… ஓமனில் ஹிந்து பெண்ணுக்கு டார்ச்சர்… வைரலாகும் கண்ணீர் வீடியோ!

என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்… ஓமனில் ஹிந்து பெண்ணுக்கு டார்ச்சர்… வைரலாகும் கண்ணீர் வீடியோ!

Share it if you like it

ஓமனில் வீட்டு வேலைக்குச் சென்ற ஹிந்து பெண், தன்னை டார்ச்சர் செய்வதாகவும், எப்படியாவது தன்னைக் காப்பாற்றுமாறும் கூறி கண்ணீர் மல்க வெளியிட்டிருக்கும் வீடியோ கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இணையத்தில் இன்று காலை முதல் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அக்காணொளியில் பேசும் பெண், “எனது பெயர் கலா. எனது ஊர் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகா பாடியநல்லூர் கிராமம். ஓமன் நாட்டுக்கு வீட்டு வேலைக்காக வந்தேன். முதலில் ஒரு வீட்டில் வேலை செய்தேன். அந்த வீடு சரியில்லை என்று சொல்லி வேறு வீட்டுக்கு மாற்றி விடும்படி கேட்டேன். அதன்படி, வேறு வீட்டுக்கு மாற்றி விட்டார்கள். ஆனால், அந்த வீட்டில் 2 பேர் மட்டுமே இருப்பதாகக் கூறினார்கள். வந்து பார்த்தால் 5 ஆண்கள், 6 பெண்கள், 4 சிறுவர்கள் என ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள்.

என்னால் இவ்வளவு பேருக்கும் வேலை செய்ய முடியவில்லை. இந்த சூழலில், இன்னொரு வீட்டுக்கும் என்னை அனுப்பி வேலை பார்க்கச் சொல்லி டார்ச்சர் செய்கிறார்கள். சரியான முறையில் சாப்பாடு கூட கிடையாது. மேலும், என் மீது திருட்டுப் பழியும் சுமத்துகிறார்கள். இதைக் காணோம், அதைக் காணோம் என்று சொல்லி என்னை டார்ச்சர் செய்வதோடு, எனது ரூமுக்கும் வந்து சோதனை செய்கிறார்கள். எனக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது. வேலை பார்க்க முடியவில்லை என்று சொல்லி, ஊருக்குப் போகிறேன் என்றால் விடமாட்டேன் என்கிறார்கள்.

ஆகவே, என்னை எப்படியாவது இங்கிருந்து காப்பாற்றுங்கள் என்று கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it