ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் தி.மு.க.வின் கபட நாடகத்தை அம்பலப்படுத்தி இருக்கிறார் பா.ஜ.க. செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞருமான குமரகுரு.
தி.மு.க.வை பொறுத்தவரை, மக்கள் நம்பும் வகையில் நாடகத்தை அரங்கேற்றுவதில் வல்லவர்கள் என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆட்சியில் இல்லாதபோது நாங்கள் ஆட்சிக்கு வந்தால்… என்று அள்ளி விடுவார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்தபிறகு, கொடுத்த வாக்குறுதிகளை மறந்து விடுவார்கள். அதேபோல, ஹிந்துக்களுக்கு ஆதரவானவர்கள் போல் நடிப்பார்கள். ஆனால், கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய விழாக்களில் கலந்துகொண்டு ஹிந்து தெய்வங்களையும், ஹிந்து மத சடங்குகளையும் கேலி, கிண்டல் செய்வார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக கடவுளே இல்லை என்று சொல்லி மக்களை திசை திருப்பி விடுவார்கள். ஆனால், வீட்டில் பெரிய பூஜை அறையை வைத்து தினசரி வழிபாடு நடத்துவார்கள். இப்படி தி.மு.க. தலைவர்களின் நாடகத்தை சொல்லிக் கொண்டே போகலாம்.
இந்த நிலையில்தான், ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் தி.மு.க. ஆடிய கபட நாடகம் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இதுகுறித்து பா.ஜ.க. செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞருமான குமரகுரு, தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது நெறியாளர் ஒருவர் ஆன்லைன் ரம்மி மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காதது குறித்து கேள்வி எழுப்புகிறார். இதற்கு பதிலளித்து பேசிய குமரகுரு, “ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் எல்லோரும் சொல்லி வைத்தார்போல ஒரே மாதிரியாகப் பேசுகிறார்கள். தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி பேசுகையில், ஆன்லைன் ரம்மி ரத்து செய்யும் விவகாரத்தில் கவர்னர் ஏன் தயங்குகிறார்? அதில் அவருக்கு என்ன இன்ட்ரெஸ்ட் என்று கேட்கிறார்.
ஆனால், உண்மையில் நடந்தது என்ன தெரியுமா? ஆன்லைன் ரம்மி விவகாரம் தொடர்பாக தி.மு.க. அவசர சட்டம் இயற்றியது. ஒரு அவசர சட்டம் என்பது 6 மாதங்களுக்குள் நடைமுறைப்படுத்தக் கூடியது. ஆனால், அந்த அவசர சட்டத்தை தி.மு.க. நடைமுறைப்படுத்தவில்லை. ரம்மியின் மீது அவ்வளவு எதிருப்புக் காட்டும் நீங்கள் ஏன் அந்த அவசர சட்டத்தை அமல்படுத்தவில்லை? அதோடு, கவர்னருக்கு அனுப்பிய அவசர சட்டத்தில் சில விளக்கங்கள் கேட்கப்பட்ட நிலையில் இதுவரை தி.மு.க. அரசு அதை தெளிவுபடுத்தவில்லை. ஆக, அவசர சட்டத்தை உடனடியாக அமல்படுத்தாத தி.மு.க. அரசு நல்லது, விளக்கங்கள் கேட்ட கவர்னர் கெட்டவரா?
இது எல்லாவற்றுக்கும் மேலாக, ஆன்லைன் ரம்மியை கோர்ட் தடை செய்ய வேண்டும் என ஒருவர் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு தடை விதித்து விடலாமா என்று கோர்ட் கேட்கிறது. அதற்கு தி.மு.க. சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நாங்கள் இன்னும் அவசர சட்டத்தை அமல்படுத்தவில்லை. அப்படி இருக்கும்போது எதற்கு தடை விதிக்க வெண்டும் என்று கேட்கிறார். இதிலிருந்து என்ன தெரிகிறது? தி.மு.க. கொண்டு வந்த அவசரச் சட்டத்தை, உடனடியாக அமலுக்கு கொண்டு வராததோடு, தடை கேட்டதற்கும் மறுப்புத் தெரிவித்திருக்கிறது. ஆக மொத்தத்தில், ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் நாடகமாடுவது தி.மு.க. அரசுதானே தவிர, கவர்னர் அல்ல” என்று கூறியிருக்கிறார்.
இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்து விட்டு, நடுநிலையாளர்ளும், அரசியல் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களும் தி.மு.க.வின் தில்லாலங்கடியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.