‘ஜெய்ஹிந்த்’ வார்த்தையை நீக்கிய தேச துரோகி ஸ்டாலின்: ஓய்வு போலீஸ் அதிகாரி ஆவேசம்!

‘ஜெய்ஹிந்த்’ வார்த்தையை நீக்கிய தேச துரோகி ஸ்டாலின்: ஓய்வு போலீஸ் அதிகாரி ஆவேசம்!

Share it if you like it

கவர்னர் உரையில் இருந்த ‘ஜெய்ஹிந்த்’ என்கிற வார்த்தையை நீக்கிய தேசதுரோகி ஸ்டாலின் என்று ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியும், அரசியல் விமர்சகருமான வரதராஜன் ஆவேசமாகக் கூறியிருக்கிறார்.

தமிழக சட்டமன்றத்தின் நிகழாண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கடந்த 9-ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. தமிழக அரசு கொடுத்த உரையில், தி.மு.க. அரசை புகழ்வது போலவும், சர்ச்சைக்குரிய வார்த்தைகளும் இடம் பெற்றிருந்தன. இந்த வார்த்தைகளை நீக்கும்படி கவர்னர் கூறிய நிலையில், அச்சுக்குச் சென்று விட்டதாக சால்சாப்பு காட்டியது தி.மு.க. அரசு. ஆகவே, உரையில் மேற்கண்ட வார்த்தைகளை தவிர்த்து விட்டுப் பேசினார் கவர்னர். இது தி.மு.க. அரசுக்கு அசிங்கமாகப் போய் விட்டதால் கவர்னர் உரைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் ஸ்டாலின். எனவே, அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார் கவர்னர். இது தி.மு.க. அரசுக்கு அவமானமாகப் போய்விட்டது.

இதையடுத்து, கவர்னருக்கு எதிராக தனது ஏவல் படையை ஏவிவிட்டார் ஸ்டாலின். அதன்படி, ரெட் லைட் பாரதி, கூவம் கிருஷ்ணமூர்த்தி ஆகிய பேச்சாளர்கள் கவர்னரை ஏகவசனத்தில் பேசியதோடு, கொலை மிரட்டல் விடுத்தும் பேசினார். மேலும், கவர்னருக்கு எதிராக போஸ்டர் அச்சடித்தும் தி.மு.க.விர் ஒட்டினர். இது ஒருபுறம் இருக்க, சபாநாயகர் அப்பாவு வெளியிட்ட அறிக்கையில், கவர்னர் தேசிய கீதம் இசைத்த பிறகுதான் வெளியில் செல்ல வேண்டும். ஆனால், தேசிய கீதம் இசைக்கும் முன்பே எழுந்து வெளியே சென்று விட்டார். இது தேசியகீதத்தை அவமதிக்கும் செயல் என்று அபாண்டமாகப் பழிபோட்டிருக்கிறார். ஆனால், கவர்னர் வெளியே வரும்போது தேசியகீதம் இசைக்கப்பட்ட நிலையில், அப்படியே நின்று மரியாதை செலுத்தி விட்டுச் சென்றார்.

இந்த நிலையில்தான், சபாநாயகர் அப்பாவுவின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியும், அரசியல் விமர்சகருமான வரதராஜன். இதுகுறித்து யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த வரதராஜன், “கடந்த கவர்னர் உரையின்போது, அதில் இடம் பெற்றிருந்த ஜெய்ஹிந்த் என்கிற வார்த்தையை நீக்கிய தேசதுரோகிகள்தானே தி.மு.க.வினர். அது மட்டும் தேசப்பற்றா? அதோடு, ஜெய்ஹிந்த் என்கிற வார்த்தையை நீக்கியதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார் கொங்கு ஈஸ்வரன். அப்போது அத்தனை தி.மு.க. உறுப்பினர்களும் கைதட்டி சிரித்தீர்கள்தானே.

நீங்கள் எல்லோரும் தேசியவாதிகளா, தேசப்பற்று உள்ளவர்களா? பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்தானே அந்த வார்த்தையை எடுத்தார். அதுவும் ஸ்டாலின் சொல்லித்தானே அதை நீக்கினார். இப்படி நீங்கள் எல்லோரும் ஜெய்ஹிந்த்தை அவமானப்படுத்தி விட்டு, கவர்னர் தேசியகீதத்தை அவமதித்து விட்டார் என்று பேசுவதற்கு நாகூசவில்லையா? ஆகவே, தேசியகீதத்தைப் பற்றியோ, ஜெய்ஹிந்த்தைப் பற்றியோ, தேசப்பற்றைப் பற்றியோ பேசுவதற்கு தி.மு.க.வினருக்கும், ஸ்டாலினுக்கும் அருகதையே இல்லை” என்று விளாசி இருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it