பகவான் ராமர், சீதா பிராட்டி, லட்சுமணன், ஹனுமன் ஆகியோரை இழிவுபடுத்தி கவிதை வாசித்த பா. ரஞ்சித்தின் உதவி இயக்குனர் மீது காவல்துறையினர் 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் நன்கு அறியப்பட்டவர் திரைப்பட இயக்குனர் ரஞ்சித். இவர், ஹிந்துக்களின் கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்களை மிக கடுமையாக விமர்சனம் செய்ய கூடியவர். அதே வேளையில், தேசவிரோத கருத்துக்களை தனது திரைப்படங்களில் புகுத்தி தனது வன்மத்தை வெளிப்படுத்த கூடிய நபர். இவரது, நெருங்கிய நண்பர் மற்றும் உதவி இயக்குநராக இருப்பவர் விடுதலை சிகப்பி. இவர், அண்மையில் பேசிய காணொளி ஹிந்துக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அக்காணொளியில், இவர் வாசித்த கவிதையில் ஹிந்து தெய்வங்களை மிகவும் கீழ்த்தரமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் விமர்சனம் செய்து இருந்தார்.
ஆபாச பேச்சாளர் சிகப்பியின் கருத்து ஹிந்துக்கள் மத்தியில் கடும் கொதிப்பை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, பல்வேறு ஹிந்து அமைப்புகள் காவல்துறையில் அவன் மீது புகார் தெரிவித்திருந்தன. அந்தவகையில், சிகப்பி மீது 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.