பாகிஸ்தானில், ஒரு கழுதைக்காக 51 பேர் மரணமடைந்த சம்பவம் ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பாகிஸ்தான் ; கராச்சியில் உள்ள புகழ் பெற்ற மசூதியில் ஏராளமான இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். அப்போது, கழுதை ஒன்று மசூதியின் உள்ளே வந்திருக்கிறது. புனிதமான, மசூதியின் உள்ளே கழுதை எப்படி? வரலாம் என இமாமுக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டு இருக்கிறது.
இதனை தொடர்ந்து, தனது துப்பாக்கியை எடுத்து கழுதையை சுட்டு கொன்று இருக்கிறார். தகவலறிந்த, கழுதையின் உரிமையாளர் தனது துப்பாக்கியுடன் வந்து மசூதியில் இருந்தவர்களை நோக்கி சுட்டு இருக்கிறார். இதில், 11 பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்து இருக்கின்றனர்.
இதையடுத்து, மசூதியில் பதுங்கி இருந்த இமாமும் அவரது ஆதரவாளர்களும் நேரடியாக கழுதையின் உரிமையாளர் கிராமத்திற்கு சென்று இருக்கின்றனர். அப்போது, கிராமத்தில் இருந்தவர்களை நோக்கி இமாமும் அவரது ஆதரவாளர்களும் சுட்டுள்ளனர். இதில், 33 பேர் மரணமடைந்துள்ளனர். இச்சம்பவம், கடந்த ஆண்டு நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. அதுகுறித்தான காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
/https://apnlive.com/world-news/donkey-mosque-viral-video/