இந்தியாவை புகழ்ந்த பாகிஸ்தான் மாஜி பிரதமர்!

இந்தியாவை புகழ்ந்த பாகிஸ்தான் மாஜி பிரதமர்!

Share it if you like it

இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவு கொள்கையை, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீண்டும் புகழ்ந்து பேசியிருக்கிறார்.

இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு, பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, காங்கிரஸ் ஆட்சியில் கையறு நிலையில் இருந்த வெளியுறவுக் கொள்கையை, திறம்பட கையாண்டு வருகிறார். அதேபோல, நிதித்துறையிலும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார். மேலும், கொரோனாவை கட்டுப்படுத்திய விதம் உலக நாடுகள் மத்தியில் மோடிக்கு மிகப்பெரிய செல்வாக்கைப் பெற்றுத் தந்தது. தவிர, ரஷ்ய – உக்ரைன் போரின் போது இந்திய மக்களை பாதுகாப்பாக மீட்டு வந்த நடவடிக்கை, உலக நாடுகளால் பாராட்டப்பட்டது. அதோடு, உலக நாடுகள் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, அனைத்து நாடுகள் மத்தியிலும் நல்லுறவை பேணி வருகிறார். இதன் காரணமாக, மோடிக்கு உலக நாடுகள் மத்தியில் தனி மரியாதை இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, இந்தியாவின் அண்டை நாடான இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. அங்கு மக்கள் புரட்சி வெடித்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ஷே, பிரதமராக இருந்த மகிந்தா ராஜபக்ஷே மற்றும் இவர்களது குடும்பத்தினர் அனைவரும் வேறுநாடுகளுக்குத் தப்பிச் சென்று விட்டனர். அதேபோல, தற்போது பாகிஸ்தானும், பங்களாதேஷும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றன. இரு நாடுகளிலும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகள் உச்சத்தில் இருக்கின்றன. இதன் காரணமாக, பங்களாதேஷில் மக்கள் புரட்சி வெடித்து விட்டது. பாகிஸ்தானிலும் மக்கள் புரட்சி வெடிக்கத் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில்தான், இந்தியாவை புகழ்ந்து பேசியிருக்கிறார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். லாகூரில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய இம்ரான் கான், பாகிஸ்தான் சுதந்திரம் பெற்ற காலத்தில்தான் இந்தியாவும் சுதந்திரம் பெற்றது. இந்தியா தனது மக்களின் விருப்பத்துக்கேற்ப சுதந்திரமான வெளியுறவு கொள்கையை வரையறை செய்திருக்கிறது. ஆனால், பாகிஸ்தானில் ஷபாஸ் ஷெரீப் அரசு கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி இந்தியாதானே தவிர, பாகிஸ்தான் அல்ல. அப்படி இருந்தும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெயை வாங்குகிறது. இத்தனைக்கும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது என்று அமெரிக்கா உத்தரவிட்டிருந்தது.

இது தொடர்பாக, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த பதிலை பாருங்கள் என்று கூறி வீடியோ ஒன்றையும் காண்பித்தார். அந்த வீடியோ ஸ்லோவேகியா நாட்டில் எடுக்கப்பட்டது. அங்கு நடந்த கூட்டம் ஒன்றில் கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜெய்சங்கர், மக்களின் தேவைக்காக நாங்கள் வாங்குகிறோம். நாங்கள் சுதந்திரமான நாடு என்று கூறியிருக்கிறார். இதனை காண்பித்து இந்தியாவை புகழ்ந்து பேசிய இம்ரான் கான், ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்க பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், அமெரிக்காவின் நெருக்கடிக்கு பயந்து வாங்கவில்லை. இதனால், இங்கு எரிபொருள் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே தள்ளப்படுகின்றனர். இந்த அடிமைதனத்தை நான் எதிர்க்கின்றேன் என்று கூறியிருக்கிறார்.

இதன் மூலம் எதிரிகளும் போற்றும் தலைவர் மோடி என்பது உறுதியாகி இருக்கிறது.


Share it if you like it