பழனியில் வேல் சிலை அகற்றம்: பக்தர்கள் திகைப்பு!

பழனியில் வேல் சிலை அகற்றம்: பக்தர்கள் திகைப்பு!

Share it if you like it

தைப்பூசத்தை முன்னிட்டு வேல் வழிபாட்டுக்காக, 4-ம் ஆண்டாக பழனி சண்முகநதியில் நிறுவப்பட்டிருந்த 24 அடி உயர பித்தளை வேல் சிலையை பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறையினர் அகற்றிய சம்பவம் பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.க. எப்போதுமே ஹிந்துக்களுக்கு விரோதமான கட்சி என்பது அனைவரும் அறிந்ததே. இதை மெய்ப்பிக்கும் வகையில், தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் ஹிந்து கோயில்களை இடிப்பது, ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படுவது என்பன போன்ற செயல்பாடுகள் அதிகரிக்கும். சமீபத்தில் மதுரையில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில் பேசிய தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு, தனது தொகுதியில் இருந்த பார்வதி, லட்சுமி, சரஸ்வதி கோயில்களை இடித்ததாக பெருமையுடன் கூறியவது அனைவருக்கும் நினைவிருக்கலாம். அதேபோல, தற்போது தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்த ஹிந்து கோயில்கள் இடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான், தைப்பூசத்தை முன்னிட்டு, பழனி முருகன் கோயிலில் வேல் வழிபாட்டுக்காக நிறுவப்பட்டிருந்த 24 அடி உயர வேல் சிலையை அகற்றி இருக்கிறது ஹிந்து விரோத தி.மு.க. அரசு. அதாவது, முருகனின் அறுபடை வீடுகளில் 3-வது படைவீடான பழனி மலை திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இந்த பழனி மலை முருகன் கோயிலில் தைப்பூச உற்சவம் வெகு விமரிசையாக நடக்கும். தமிழகம் மட்டுமின்றி பிற மாநில பக்தர்களும் முருகனுக்கு மாலை அணிந்து தைப்பூச தினத்தன்று தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவார்கள். அப்போது, முருகன் கோயிலை ஒட்டியுள்ள சண்முகநதியில் நிறுவப்பட்டிருக்கும் 24 அடி உயரமுள்ள வேல் சிலைக்கும், பக்தர்கள் வழிபாடு நடத்துவது வழக்கம்.

இந்த சூழலில், கடந்த 4 ஆண்டுகளாக மெய்த்தவம் பொற்சபை உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் சண்முகநதி தூய்மைப்பணி மற்றும் சண்முகநதி ஆராத்தி நிகழ்ச்சிகளை செய்து வருகின்றன. எனவே, தைப்பூசத்தின்போது 24 அடி உயரமுள்ள பித்தளை வேல் சிலையை நிறுவி, திருவிழா முடிந்த பிறகு அகற்றி விடுவது வழக்கம். அந்தவகையில், தைப்பூசத்தை முன்னிட்டு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சண்முகநதியில் வேல் சிலை வைக்கப்பட்டது. பிப்ரவரி 7-ம் தேதி தைப்பூசத் திருவிழா முடிந்த பிறகு, இச்சிலையை அகற்றி விடுவதாக வழிபாட்டுக் குழுவினர் தெரிவித்திருந்தனர். ஆனால், கடந்த 1-ம் தேதி திடீரென வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், மாலைக்குள் வேல் சிலையை அகற்ற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் தாங்களே வேல்சிலை அகற்றுவோம் என்று நோட்டீஸ் விட்டார்கள்.

இது தொடர்பாக வழிபாட்டுக் குழுவினர் ஆலோசனை நடத்தி வந்த நிலையில், திடீரென நேற்று அதிகாலை போலீஸ் பாதுகாப்போடு 24 அடி உயர வேல் சிலையை அகற்றி இருக்கிறார்கள் பொதுப்பணித்துறையினர். பொக்லைன், கிரேன் உதவியோடு சிலையின் பீடத்தை தகர்த்து சிலை பிரித்து எடுத்து, லாரியில் ஏற்றி கொண்டு சென்றிருக்கிறார்கள். இதைத் தடுக்க முயன்ற மெய்த்தவம் பொற்சபை நிறுவனர் மெய்த்தவ அடிகளாரையும் போலீஸார் ஜீப்பில் ஏற்றிச் சென்று காவலில் வைத்திருக்கிறார்கள். சண்முகநதியில் பக்தர்கள் வழிபாட்டுக்காக நிறுவப்பட்டிருந்த வேலை போலீஸார் பாதுகாப்புடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றிய சம்பவம் பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும், இந்த விவகாரம் முருக பக்தர்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விடியா தி.மு.க. அரசின் ஆட்சியில் ஹிந்துக்களுக்கும், ஹிந்து கோயிலுக்கும்தான் பாதுகாப்பு இல்லை என்று பார்த்தால், தற்போது வழிபாட்டுக்குக்கூட தடை விதிக்கும் நிலைக்கு சென்றிருக்கிறது என்று குமுறி வருகிறார்கள். அதேபோல, பழனி முருகன் கோயில் வேலை அகற்றியது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்துவிட்டு பொதுமக்களும் தி.மு.க. அரசை வசைபாடி வருகின்றனர்.


Share it if you like it