பார்லிமென்டில் செங்கோலை இடம்பெறச் செய்த பாரத பிரதமர் மோடிக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.
தலைநகர் டெல்லியில் பழைய பார்லிமென்ட் கட்டடத்துக்கு பதிலாக புதிய கட்டடம் கட்டப்பட்டிருக்கிறது. இதை பாரத பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் ஒரு புதுமையைப் படைத்தார் பிரதமர் மோடி. அதாவது, 1947-ல் நாடு சுதந்திரம் பெற்று நேரு பிரதமராக பதவியேற்றபோது, தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் செங்கோல் வழங்கப்பட்டது. ஆனால், இச்செங்கோல் ஆமதாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், புதிய பார்லிமென்ட் திறக்கப்படவிருக்கும் சூழலில், செங்கோல் பற்றிய தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, செங்கோல் விவகாரம் தொடர்பாக, பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் விரிவான விசாரணை நடத்திய நிலையில், செங்கோல் வழங்கப்பட்டது உண்மை என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, செங்கோல் இருக்கும் இடமும் கண்டறியப்பட்டது. இந்த செங்கோல்தான் தற்போது புதிய பார்லிமென்ட்டில் நிறுவப்பட்டிருக்கிறது.
இதற்குத்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில், “இந்திய நாட்டின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் – செங்கோல். #தமிழன்டா… தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த மதிப்பிற்குரிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி” என்று தெரிவித்திருக்கிறார்.