செங்கோலை கண்டு வயிற்றெரிச்சலில் கதறும் மந்திர கோல் உ.பீஸ்!

செங்கோலை கண்டு வயிற்றெரிச்சலில் கதறும் மந்திர கோல் உ.பீஸ்!

Share it if you like it

புதிய பாராளுமன்றத்தில் செங்கோலை நிறுவிய பிரதமருக்கு எதிராக தி.மு.க., காங்கிரஸ், வி.சி.க. உள்ளிட்ட கட்சியினர் தற்போது கதறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைநகர் டெல்லியில் அமைந்திருக்கும் பார்லிமென்ட் கட்டடம் மிகவும் பழமை வாய்ந்தது. ஆகவே, அக்கட்டடத்திற்கு பதிலாக, அதன் அருகிலேயே 64,500 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமான புதிய பார்லிமென்ட் கட்டப்பட்டது. அந்த வகையில், அதன் திறப்பு விழா பாரதப் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்நிலையில், தமிழர்களின் பெருமையாக கருதப்படும் புனித செங்கோலை சபாநாயகர் ஓம் பிர்லா இருக்கையின் வலப்புறத்தில் பிரதமர் நிறுவினார். இதுகுறித்தான, காணொளிகளும், புகைப்படங்களும் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், தி.மு.க., வி.சி.க. மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், அடிப்பொடிகள் பிரதமர் மோடி மீது உள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தற்போது சமூகவலைத்தளங்களில் அலறி வருகின்றனர்.

Image

Share it if you like it