கட்சிக்கு குட்பை சொல்லி வெளியேறும் கட்சி நிர்வாகிகள் : கலக்கத்தில் காங்கிரஸ் !

கட்சிக்கு குட்பை சொல்லி வெளியேறும் கட்சி நிர்வாகிகள் : கலக்கத்தில் காங்கிரஸ் !

Share it if you like it

ஆம்ஆத்மி உடன் கூட்டணி வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லி காங்கிரஸ் தலைவர்கள் 2 பேர் கட்சியில் இருந்து வெளியேறினர். சமீபத்தில் டில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி பதவியை ராஜினாமா செய்தார். டில்லியில் காங்கிரசை தலைவர்கள் அடுத்தடுத்து கை கழுவி வருவதால், தலைமைக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.

பல்வேறு ஊழல் சிக்கி உள்ள ஆம்ஆத்மி உடன் கூட்டணி வைத்திருப்பதற்கு டில்லி காங்கிரஸ் தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. சமீபத்தில் அர்விந்தர் சிங் லவ்லி, தன் டில்லி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். தங்கள் விருப்பத்திற்கு எதிராக ஆம் ஆத்மியுடன் கட்சி தலைமை கூட்டணி அமைத்ததை தன் ராஜினாமாவுக்கான காரணங்களில் ஒன்றாக அவர் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், ஆம்ஆத்மி உடன் கூட்டணி வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லி காங்கிரஸ் தலைவர்கள் 2 பேர் கட்சியில் இருந்து வெளியேறினர். இந்த இரண்டு பேரும் டில்லியில் இரண்டு லோக்சபா தொகுதிகளுக்கு பார்வையாளர்களாக இருந்தனர்.

நீரஜ் பசோயா மற்றும் நசீப் சிங் ஆகிய இரு தலைவர்களும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு எழுதிய கடிதங்களில், கட்சிகளை விட்டு வெளியேறியதற்கு, காரணம் ஊழல் செய்து வரும் ஆம்ஆத்மியுடன் கூட்டணி வைத்திருப்பது தான் என குறிப்பிட்டுள்ளனர். அடுத்தடுத்து நிர்வாகிகள் ராஜினாமா, காங்கிரஸ் கட்சி தலைமை என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கும் நிலையில் உள்ளனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *