பாரதப் பிரதமர் மோடி அவர்கள் அமெரிக்க சுற்றப்பயணத்தை முடித்து விட்டு பல்வேறு பணிகளுக்கு இடையில் புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்றத்தை பார்வையிட நேரில் சென்று இருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் ஸ்டாலினை தமது தலைவராகவே ஏற்றுக் கொண்டு இன்று வரை செயல்பட்டு கொண்டு இருக்கும் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் சித்தரிக்கப்பட்ட புகைப்படம் என்பது கூட தெரியாமல் பாரதப் பிரதமர் மோடி மீது தனது வன்மத்தை வெளிப்படுத்தி இருந்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரின் செயலுக்கு பல அரசியல் தலைவர்கள் முதல் சமூக ஆர்வலர்கள் வரை பலர் தங்களின் கடும் எதிர்ப்பினை தெரிவித்து இருந்தனர்.
இச்சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் சோனியாவின் மகளுமான பிரியங்கா காந்தி உ.பி செல்ல முயன்ற பொழுது காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி வீட்டுச் சிறையில் வைத்தனர் . அப்பொழுது அவர் தனது அறையை சுத்தம் செய்வது போன்ற காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிரதமர் குறித்து டுவிட்டரில் பதிவு செய்த பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் பிரியங்கா காந்தியின் புகைப்படத்தை இது போன்று வெளியிடுவாரா? என்று கீழ்கண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
