ஆடி 5 ம் வெள்ளி சிறப்பு வழிபாடு – பொருள் அருளும் தாயார் பிடாரியூர் திருப்பிராட்டியம்மன்

Share it if you like it

பழம்பெரும் பூந்துறை நாட்டின் தொல்பதிகள் 32 ஊர்களில் ஐந்தாவது இடத்தை பெற்று திகழ்வது பிடாரியூர்.

பெரு கற்சின்னங்களும் தொல்பழங்கால பொருட்களும் பண்டைய ஊர் பகுதியான நத்தமேடும் நடுக்கற்களும் கல்வெட்டுகளும் செப்பேடுகளும், பட்டயங்களும் வரலாற்று ஆவணங்களும் பிடாரியூரை பலவாறாக புகழ்ந்து கூறுகின்றன .இலக்கியமும் தலபுராணங்கள் பாடிய பல்கலைச் சான்றோரும் வாழ்ந்த பேரூர் பிடாரியூர் .ஏடுகளை காத்து போற்றியதும் பிடாரியூர்.

பூந்துறை நாட்டின் தலைமை தளமாக சென்னிமலை விளங்கியது. சென்னிமலையில் தைப்பூச தேர் மிகவும் விசேஷமானது.

முன்னொரு காலத்தில் ஆதிசேஷனும் வாயுவும் தங்களுக்குள் யார் வலிமையானவர் என்று தர்க்கமிட்டு மேருமலையை சுற்றினர் அப்போது மேருமலையின் உச்சிகளில் ஒன்று சிதைந்து பூந்துறை நாட்டில் விழுந்தது அதுவே சென்னிமலை.பார்வதி சென்னிமலையில் முருகனை கோயிலில் இறைவனாக எழுந்தருளுமாறு செய்தார். சென்னிமலையில் தவம் செய்து கொண்டிருந்த சத்திய ஞான முனிவருக்கும் உமாதேவி காட்சி கொடுத்ததார். பின்னர் வனத்தில் சென்று கடும் தவம் புரிந்து உமாதேவி சிவபெருமான் மீண்டும் அழைத்துக் கொண்டார்.

இங்கு சிவாலயம் இருந்தாலும் முருகனுக்கு முதல் பூஜை நடைபெறுகிறது சிவாலய சோழன் (காஞ்சிமா நதியில்) நொய்யல் நதியில் ந தீர்த்தமாடிய போது 10 வயது சிறுவனாக முருகன் தோன்றி காட்சி கொடுத்து மறைந்தார் .சிவாலய சோழன் அரிதின் முயன்று மலையேறி வழிபட்டு முருகனுக்கு கோயில் அமைத்தார்.

காளை வாகனத்தில் நாள்தோறும் முருகப்பெருமானுக்கு தீர்த்தம் எடுத்துச் செல்வது சிறப்புக்குரியது. சந்தக்கவியால் இன்னிசை பாக்கள் பாடி முருகன் தளங்களில் வழிபட்டு திருப்புகழ் பாக்கள் பாடிய அருணகிரிநாதர் சென்னிமலைக்கு வந்து திருப்புகழ் பாடியுள்ளார். முருகப்பெருமான் அருணகிரிநாதருக்கு படிக்காசு வழங்கியதாக சென்னிமலை ஆண்டவர் காதல் என்ற நூல் கூறுகிறது .பிடாரியூர் ஆனது முகாசி பிடாரியூர் என்று அழைக்கப்படுகிறது.

பிராட்டியம்மன் கோயிலில் கிழக்கு மற்றும் தெற்கு திசை நோக்கி அழகிய வேலைப்பாடு அமைந்த குதிரைகள் கம்பீரத்துடன் நிற்கின்றன. உள்ளே கிழக்கு பார்த்த தூணில் நர்த்தன விநாயகர் , சிம்மவாகனன், கருப்பணசாமி, முனியப்பசாமி,பொன் காளியம்மன், கன்னிமார், வீரமாத்தி என்னும் தீப்பாய்ந்த அம்மன் ஆகியவை இந்தச் சன்னிதியில் உள்ளன .திருமாலின் அம்சமே கருப்பணசாமி.

கோவில் அமைவிடம் : ஈரோட்டில் இருந்து சென்னிமலை செல்லும் வழியில் பிடாரியூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.கோயில் திறக்கும் நேரம் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை

கோவிலின் முன்பகுதியில் கொடி மரம் காணப்படுகிறது கோபுரத்தை ஸ்தூல லிங்கமாகவும் கொடி மரத்தை சூட்சுமலிங்கமாகவும் நினைத்து வழிபடுவது இந்துக்களின் ஐதீகம் .கொடி மரத்தின் அடிப்பாகம் சதுரமாக உள்ளது இது இறைவனின் படைப்பை கூறுகிறது இதன் மேல் பாகம் எண்கோண வடிவமாக உள்ளது . இது காத்தலை குறிக்கிறது. எட்டு திசைகளில் இருந்தும் வரும் இடர்களை குறிக்கிறது. இதனுடைய மேல்பாகம் உருத்ரனை குறிக்கிறது. கொடிமரம் ஆனது மும்மூர்த்திகளின் முத்தொழிலையும் செய்கிறது.

காலையில் அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் செய்த பின் ராக்கால பூஜை முடிந்தவுடன் நடை பாவாடை விரித்து மகா மண்டப கதவு இரவு எட்டு மணிக்கு திருகாப்பு இடப்படும் . பின்னர் தீபா ராதனை செய்த பிறகு திருக்கதவு திறக்கப்படுவது இன்று வரை வழக்கமாக உள்ளது.

அருகில் சிவன் கோயில் உள்ளது. இதில் நான்கு கால பூஜை நடைபெறுகிறது. இந்த திருப்பிராட்டி அம்மனை வழிபடுபவர்கள் சென்னிமலை சென்று தங்களுடைய குலகுருவை வழிபட வேண்டும் என்பது எழுதப்படாத நியதி. இன்றும் இந்த வழக்கத்தை மக்கள் கொண்டிருக்கிறார்கள்.

திருப்பிராட்டி அம்மனை தானே வளர்ந்த தம்பிராட்டி அம்மன் எனவும் அழைக்கின்றனர். சுயம்பு அம்மன் என்பதே இதன் பொருள். அருள் தன்மையுடன் சுயம்புவாக முளைத்து எழுந்த இடத்தில் பிற்காலத்தில் அம்மன் உருவத்தை எழுந்தருள செய்திருக்க வேண்டும் .பல்வேறு சிறப்புகள் பொருந்திய தாய் தெய்வங்கள் வடக்கு நோக்கி இருப்பது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது . இதனை வடவாயிற் செல்வி என்று இலக்கியங்கள் கூறுகின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக பிடாரியூர் திருப்பிராட்டி அம்மன் வடக்கு நோக்கி அமர்ந்து பொருள் தந்த குலத்தாருக்கு காவல் தெய்வமாக இருந்து வேண்டியவர்க்கு வேண்டியதை கொடுத்து வரும் சக்தியாக திகழ்கின்றாள்.

கட்டுரை எழுதி தொகுத்தளித்தவர்

திருமதி பரமேஸ்வரி பார்த்திபன்

Share it if you like it