இந்தியாவில் நடைபெறக்கூடிய தேர்தலை சீர்குலைக்க சீனா முயற்சிப்பதாக இந்து முன்னணி குற்றச்சாட்டை வைத்துள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
பொய்யான தகவல்கள், பொய் பிரச்சாரங்களை கொண்டு உலகெங்கும் 88 நாடுகளில் தேர்தல் நேரங்களில் குழப்பங்களை ஏற்படுத்தி அமெரிக்கா, யூகே நாடுகள் தாங்கள் நினைத்ததை சாதித்துள்ளன என்பது யாவரும் அறிந்ததே.. அந்த வகையில் உலகளவில் வளர்ந்து வரும் நாடாக இந்தியாவை உலக வங்கியே பாராட்டியுள்ள நிலையில், நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக ஜெயித்தால் வளர்ச்சியின் விகிதாச்சாரம் கூடும், இந்தியா வல்லரசாகும் என்பது எதிரி நாடுகளுகளின் கணிப்பு…
எனவே இந்த தேர்தலை சீர்குலைக்க பொய்யான தகவல்கள், போலி செய்திகளை பரப்பி கம்யூனிஸ்ட் கூட்டணி கட்சிகள் தமிழக மக்களை குழப்புவதை போல, கம்யூனிஸ்ட் நாடான சீனா இந்தியாவில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேர்தலை சீர்குலைக்க உள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் எச்சரித்துள்ளது. விரோதிகளை வீழ்த்த விழிப்புடன் இருப்போம், கட்டாயம் 100% வாக்களிப்போம்..!!