பாரத பிரதமர் மோடிக்கு பிஜி நாட்டின் உயரிய விருது!

பாரத பிரதமர் மோடிக்கு பிஜி நாட்டின் உயரிய விருது!

Share it if you like it

உலகளாவிய தலைமைத்துவத்தை அங்கீகரிக்கும் விதமாக, பாரத பிரதமர் மோடிக்கு பிஜி நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டிருக்கிறது. இதை அந்நாட்டு பிரதமர் சிதிவேனி ரபுகா, பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்திருக்கிறார். பிஜி நாட்டின் குடிமகன் அல்லாத ஒருவருக்கு இந்த கவுரவம் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய – பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு அமைப்பின் (எஃப்.ஐ.பி.ஐ.சி.) 3-வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் மோடி பப்புவா நியூ கினியா நாட்டுக்கு சென்றிருக்கிறார். இந்த சூழலில், பிஜி நாட்டு பிரதமர் சிதிவேனி ரபுகா, பாரத பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போதுதான் பிரதமர் மோடிக்கு பிஜி நாட்டின் உயரிய விருதை வழங்கி கௌரவித்திருக்கிறார் அந்நாட்டின் பிரதமர் ரபுகா. இதுகுறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “பிஜி பிரதமரை சந்தித்ததில் பெரும்மகிழ்ச்சியடைகிறேன். பல்வேறு தலைப்புகளில் நாங்கள் உரையாடினோம். காலத்தின் சோதனையால் பிஜி மற்றும் இந்தியாவுக்கு இடையேயான உறவுகள் நின்றுவிட்டன. இதை வரும் ஆண்டுகளில் முன்னெடுத்துச் செல்ல நாங்கள் ஒன்றிணைந்து செயல்பட உறுதியேற்றுள்ளோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, பிரதமர் அலுவலகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பிரதமர் மோடியின் உலகளாவிய தலைமைத்துவத்தை அங்கீகரிக்கும் விதமாக, பிஜி நாட்டின் உயரிய விருதான ‘கம்பானியன் ஆஃப் ஆர்டர் ஆஃப் பிஜி’ என்ற விருதை, அந்நாட்டி சிதிவேனி ரபுகா, பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்திருக்கிறார். இதுவரை பிஜி நாட்டு குடிமகன்களாக இல்லாத ஒரு சிலரே இந்த கவுரவத்தை பெற்றிருக்கிறார்கள். அந்த வகையில், பிரதமர் மோடிக்கு இவ்விருது கிடைத்திருப்பது இந்தியாவுக்கான மிகப் பெரிய கவுரவம்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Share it if you like it