ஆதாரத்தை கொடுத்தால் உயிர் இருக்காது: தி.மு.க. ஆட்சியின் அவலம்… மூத்த பத்திரிகையாளர் பகீர்!

ஆதாரத்தை கொடுத்தால் உயிர் இருக்காது: தி.மு.க. ஆட்சியின் அவலம்… மூத்த பத்திரிகையாளர் பகீர்!

Share it if you like it

தவறு நடப்பதற்கான ஆதாரத்தை கேட்கிறார்கள். அப்படிக் கொடுத்தால் உயிர் இருக்காது என்று தி.மு.க. ஆட்சியின் அவலத்தை மூத்த பத்திரிகையாளர் மணி போட்டு உடைத்திருக்கிறார்.

தமிழகத்தில் சமீபத்தில் மணல் கடத்தலை தடுத்த வி.ஏ.ஓ. வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மற்றொரு வி.ஏ.ஓ.வை கொல்ல முயற்சி நடந்தது. தி.மு.க. ஆட்சியில் இப்படி அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது. இந்த சூழலில், டாஸ்மாக் மதுபானக் கடைகளில் குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக விற்கப்படுவதாக, அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் செய்தியாளர்கள் குற்றம்சாட்டினர். இதற்கு எந்தக் கடையில் கூடுதலாக வாங்குகிறார்கள் என்று ஆதாரத்துடன் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மூத்த பத்திரிகையாளர் மணி, டாஸ்மாக் கடைகளில் இல்லீகலாக 24 மணி நேரமும் பார்கள் செயல்படுகின்றன. இதுகுறித்து தகவல் கூறினால் ஆதாரத்துடன் தெரிவித்தால் அமைச்சரிடம் சொல்லி நடவடிக்கை எடுப்பதாக தி.மு.க. நிர்வாகி கூறுகிறார். ஆதாரப்பூர்வமாக தெரிவித்தால் நாம் உயிருடன் இருப்போமா என்பதே சந்தேகம்தான். சமீபத்தில் நடந்த வி.ஏ.ஓ. கொலைதான் இந்த சாட்சி என்று கூறியிருக்கிறார்.

இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, தி.மு.க. அரசின் அவலத்தை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.


Share it if you like it