கேப் விடாம அடிக்கிறாங்களே… ராகுல் காந்தி மீது மற்றொரு அவதூறு வழக்கு: பாட்னா கோர்ட் சம்மன்!

கேப் விடாம அடிக்கிறாங்களே… ராகுல் காந்தி மீது மற்றொரு அவதூறு வழக்கு: பாட்னா கோர்ட் சம்மன்!

Share it if you like it

பிரதமர் மோடி குறித்த மற்றொரு அவதூறு வழக்கில் 12-ம் தேதி கோர்ட்டில் ஆஜராகும்படி, ராகுல் காந்திக்கு பாட்னா கோர்ட் சம்மன் அனுப்பி இருக்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, மோடி சமுதாயம் குறித்து அவதூறாகப் பேசிய ராகுல் காந்திக்கு, குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதனால், எம்.பி. பதவியை இழந்த ராகுல், அரசு பங்களாவையும் காலி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார். பிறகு, சாவர்க்கர் பற்றி அவதூறாகப் பேசி, சர்ச்சையில் சிக்கினார். இதுகுறித்து ராகுல் மன்னிப்புக் கேட்காவிட்டால் அவர் மீது வழக்குத் தொடர்வேன் என்று சாவர்க்கர் பேரன் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

இந்த நிலையில்தான், பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக, பீகார் மாநிலம் பாட்னா கோர்ட் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பி இருக்கிறது. அதாவது, பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி அவதூறாகப் பேசியதாக, பா.ஜ.க. மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான சுசில்குமார் மோடி, பாட்னாவிலுள்ள எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசராணைக்கு ஏற்றுக் கொண்ட பாட்னா சிறப்பு நீதிமன்றம், வரும் ஏப்ரல் 12-ம் தேதி ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி இருக்கிறது. இது ராகுல் காந்திக்கு மட்டுமல்லாது காங்கிரஸ் கட்சியினருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படி கேப் விடாம அடிக்கிறாங்களே என்று நொந்து நூடுல்ஸாகி இருக்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர்.


Share it if you like it