அண்டை நாட்டு தேசிய கீதம்: ராகுல் காந்தி அதிர்ச்சி!

அண்டை நாட்டு தேசிய கீதம்: ராகுல் காந்தி அதிர்ச்சி!

Share it if you like it

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் நேபாள் நாட்டு தேசிய கீதம் ஒலிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ’பாரத் ஜோடோ யாத்திரா’ எனும் பெயரில் நீண்ட தூர நடைப்பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். இந்த, பயணம் கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் துவங்கி, காஷ்மீரில் நிறைவு பெறும் விதமாக திட்டமிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், 150 நாட்களில் 3,500 கிலோ மீட்டர் தூரம் செல்ல ராகுல் காந்தி திட்டமிட்டு இருக்கிறார். இவர், நடைப்பயணத்தில், பல்வேறு நகைச்சுவை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

இதனிடையே, தெலங்கானாவில் தனது நடை பயணத்தை மேற்கொண்டு இருந்த சமயத்தில்தான் அம்மாநிலத்தில் நடந்து முடிந்த முனுகோட் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவர துவங்கின. இதில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் படுதோல்வியை தழுவினார். மேலும், அவருக்கு டெபாஸிட் தொகை கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ராகுல் காந்தி, ஒரு மாநிலத்தில் கால் வைக்கும் முன்பே அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தங்களை பா.ஜ.க.வில் இணைத்து கொள்கின்றனர். இப்படியாக, ராகுல் காந்தி கால் வைக்கும் மாநிலங்களில் எல்லாம் கட்சி நிர்வாகிகள் ஒன்று கூடி கண்ணி வெடியை வைத்து விடுகின்றனர்.

அந்தவகையில் தான், இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அதாவது, பாரத் ஜோடாவின் யாத்திரையின் போது ராகுல் காந்தி பேசும் வண்ணம் மிகப்பெரிய கூட்டத்தை கட்சி நிர்வாகிகள் கூட்டியிருக்கின்றனர். அப்போது, தேசிய கீதத்தை ஒலிக்க செய்யுங்கள் என ராகுல் காந்தி தனது கட்சியை சேர்ந்த நிர்வாகிகளுக்கு உத்தரவிடுகிறார். இதையடுத்து, தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது.

இதில், கொடுமை என்னவென்றால், இந்திய தேசிய கீதத்திற்கு பதில் நேபாள் நாட்டு தேசிய கீதம் ஒலிக்கப்பட்டுள்ளது. நேபாள் நாட்டு தேசிய கீதம் எது, இந்திய தேசிய கீதம் எது என்று கூட தெரியாமல் நமது கட்சி தலைவர்கள் இருக்கிறார்களே இவர்களை வைத்து கொண்டு நான் எப்படி? பிரதமர் ஆவேன் என ஒரு கணம் ராகுல் தனக்குள் நினைத்து கொண்டு கதறி இருப்பார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

அரசியல் ஞானி ராகுல் காந்தியை இப்படி? தொடர்ந்து நோகடிக்கும் செயல் கடும் கண்டனத்திற்குறியது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it