அஜ்மீர் தர்காவை புறக்கணித்த ஹிந்துக்கள்: ரூ.50 கோடி வர்த்தகம் இழப்பு!

அஜ்மீர் தர்காவை புறக்கணித்த ஹிந்துக்கள்: ரூ.50 கோடி வர்த்தகம் இழப்பு!

Share it if you like it

அஜ்மீர் தர்காவின் காதிம்கள் தொடர்ந்து ஹிந்துக்களுக்கு எதிராக கருத்துத் தெரிவித்து வந்ததால், அஜ்மீர் தர்காவை ஹிந்துக்கள் புறக்கணித்து விட்டனர். இதனால், தர்காவுக்கும், இஸ்லாமிய மக்களுக்கும் 50 கோடி ரூபாய் வர்த்தக இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா, ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சியில் கடந்த மாதம் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த தஸ்லிம் அஹமது ரெஹ்மானி என்பவர், சிவபெருமானையும், லிங்கத்தையும் பற்றி அவதூறாகவும், அறுவெறுக்கத்தக்க வகையிலும் பேசினார். இதை நுபுர் ஷர்மா பலமுறை கண்டித்தும் கேட்காததால், இஸ்லாமிய மதப் புத்தகத்தில் முகமது நபி பற்றி குறிப்பிடப்பட்டிருந்த கருத்தை சுட்டிக்காட்டினார். இதில், ரெஹ்மானி பேசியதை கட் செய்துவிட்டு, நுபுர் ஷர்மா பேசியதை மட்டும் எடிட் செய்து Alt நியூஸ் என்கிற செய்தி நிறுவனத்தின் இணை இயக்குனரான முகமது சுபைர், சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இஸ்லாமிய சமுதாயத்தினர் மத்தியில் வெறுப்புணர்வை தூண்டி விட்டார். இதன் தொடர்ச்சியாக, நுபுர் ஷர்மாவுக்கு எதிராக இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஒன்று கூடினர்.

அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தர்காவின் காதிம்களாக இருக்கும் கௌஹர் சிஷ்டி, சர்வார் சிஷ்டி, சல்மான் சிஷ்டி ஆகியோர் ஹிந்துக்களுக்கு எதிராகவும், இந்தியாவுக்கு எதிராகவும் வன்முறையை தூண்டி விடும் வகையில் கருத்துக்களை தெரிவித்தனர். குறிப்பாக, நுபுர் ஷர்மாவின் தலைமை கொய்து வருபவர்களுக்கு தனது வீட்டையும், சொத்தையும் எழுதித் தருவதாக சஸ்மான் சிஷ்டி என்பவர் கூறி வீடியோ வெளியிட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல, முழு ஹிந்துஸ்தானையும் அதிரவைக்கும் அளவுக்கு மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்று சர்வார் சிஷ்டி எச்சரிக்கை விடுத்தார். கௌர் சிஷ்டியோ, ஹிந்துக்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சுக்களை வெளியிட்டார். இந்த சூழலில்தான், நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்ட உதய்பூரைச் சேர்ந்த டெய்லர் கன்ஹையா லால் கழுத்தறுத்துக் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, சல்மான் சிஷ்டி கைது செய்யப்பட்டார். ஆனால், மற்ற இருவரும் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில்தான், காதிம் சர்வார் சிஷ்டி ஹிந்துக் கடைகளில் பொருட்களை வாங்க வேண்டாம் என்று கூறியிருக்கும் ஆடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில், “நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக அஜ்மீர் ஷெரீப்பில் உள்ள நல்லா பஜார் மற்றும் தர்கா பஜாரில் உள்ள ஹிந்துக்கள் பேரணிக்கு ஏற்பாடு செய்தனர். மதியம் 12 வரை கடைகளை அடைக்கும்படி அழைப்பு விடுத்தனர். ஆகவே, தர்கா பஜார் மற்றும் நல்லா பஜார் பகுதியில் உள்ள ஹிந்துக்களின் கடைகளில் யாரும் எந்த பொருட்களையும் வாங்க வேண்டாம். இதை உங்களால் முடிந்த எல்லாருக்கும், எல்லா இடங்களிலும் பரப்புங்கள். யாரும் ஒரு ரூபாய்கூட ஹிந்துக்களிடம் பரிவர்த்தனை செய்யக் கூடாது” என்று கூறியிருக்கிறார்.

இதனிடையே, அஜ்மீர் தர்காவின் மற்றொரு காதிமான கௌஹர் சிஸ்டி என்பவர், கன்ஹையா லாலை கொலை செய்தவரை சந்தித்திருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. ஜூன் 17-ம் தேதி நுபுர் சர்மாவின் தலையை துண்டிக்க கௌஹர் சிஸ்டி அழைப்பு விடுத்து வீடியோ வெளியிட்டார். இதன் பிறகு, கன்ஹையா லாலை கொலை செய்த குற்றவாளிகளில் ஒருவரான ரியாஸ் அட்டாரியை சந்திக்க உதய்பூருக்குச் சென்றிருக்கிறார். அதேநாளில்தான், நுபுர் சர்மாவிற்கும், அவரது ஆதரவாளருக்கும் ரியாஸ் அட்டாரி மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டிருக்கிறான். இந்த் கௌஹர் சிஷ்டியின் மாமாதான் ஹிந்துக்களிடம் வணிகம் செய்யாமல் புறக்கணிக்கும்படி கூறிய சர்வார் சிஷ்டி. ஆனால், அஜ்மீர் தர்கா காதிம்களின் இந்த வெறுப்புப் பேச்சு அவர்களுக்கு எதிராகவே திரும்பி விட்டதுதான் பரிதாபம்.

அஜ்மீர் தர்காவில் வர்த்தகம் செய்வதை ஹிந்துக்கள் முற்றிலுமாக நிறுத்தி விட்டனர். குறிப்பாக, அஜ்மீர் தர்காவுக்கு செல்வதையும் அறவே நிறுத்தி விட்டனர். பொதுவாகவே, அஜ்மீர் தர்கா பகுதியில் வெள்ளிக்கிழமைகளில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை நேர்மாறாக சொற்பளவு கூட்டம் கூட இல்லை. பல ஹோட்டல்களில் முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டன. போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் உணவகங்களிலும் வருகை குறைவாகவே இருந்தது. இதுகுறித்து காதிம் சையத் ஐனுதீன் சிஷ்டி கூறுகையில், “அஜ்மீரின் பொருளாதாரம் தினமும் நகரத்திற்கு வருகை தரும் பார்வையாளர்களை நம்பியே உள்ளது. வெள்ளிக்கிழமைகளில் பொதுவாக கூட்டமாக இருக்கும். காதிம்களின் வெறுக்கத்தக்க கருத்துக்களால் விருந்தினர் மாளிகைகள் மற்றும் ஹோட்டல்களுக்கு வருகை தரும் நபர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. ஹிந்து பக்தர்கள் அஜ்மீர் தர்காவிற்கு வருவதை தவிர்த்து விட்டனர்” என்றார்.

ஜன்னத் குரூப் ஆஃப் ஹோட்டல் உரிமையாளர் ரியாஸ் கான் கூறுகையில், “அஜ்மீர் தர்கா காதிம்களின் வெறுப்பூட்டும் பேச்சுக்களால் ஹிந்து பார்வையாளர்களின் வருகையை பாதித்துள்ளது. புனித நாளில் கூட யாரும் வராததால் ஹோட்டல்கள் நிரம்பவில்லை” என்றார் வருத்தமாக. மேலும், அஜ்மீர் தர்கா பகுதியிலுள்ள அனைத்துக் கடைகளும் காற்று வாங்கி வருகிறது. விற்பனையாளர்கள் சும்மாவே அமர்ந்திருக்கிறார்கள். இதனால், குறைந்தது 50 கோடி ரூபாய்க்கும் மேல் வர்த்தக இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த நகரின் பொருளாதாரம் என்பது தர்காவிற்கு வருகை தரும் 15,000 முதல் 20,000 ஹிந்து பக்தர்களால்தான் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதான் காந்தி காட்டிய அஹிம்சை வழிபோல!


Share it if you like it