சமூக வலைத்தளங்களில் வைரலாகும் போட்டோ!

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் போட்டோ!

Share it if you like it

தீப்பற்றி எரியும் வீட்டுக்குள் இருந்து ஒரு கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு போலீஸ்காரர் ஒருவர் ஓடிவரும் போட்டோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. என்ன சம்பவம்? யார் அவர்? எதற்காக குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடிவருகிறார்?

ராஜஸ்தான் மாநிலத்தில் ஹிந்து நாட்காட்டியின் கீழ் புத்தாண்டின் முதல் நாளை ‘நவ சம்வத்ஸர்’ என்கிற விழாவாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், கடந்த 3-ம் தேதி நவ சம்வத்ஸர் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஹிந்துக்கள் சைக்கிள் பேரணியாகச் சென்றனர். கரவ்லி பகுதியில் பேரணி சென்றபோது, அப்பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள், ஹிந்துக்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து, ஹிந்துக்களும் பதிலுக்கு கற்களை வீசினர். இதனால், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, அப்பகுதியில் இருந்த வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, போலீஸார் குவிக்கப்பட்டனர்.

இப்படி தீவைக்கப்பட்ட ஒரு வீட்டில் கைக்குழந்தை ஒன்று சிக்கிக் கொண்டது. இதையறிந்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் நேத்ரேஷ் ஷர்மா என்பவர், அந்த வீட்டுக்குள் புகுந்தார். பின்னர், அங்கிருந்த போர்வையை எடுத்து குழந்தையின் உடலில் போர்த்திவிட்டு தூக்கிக் கொண்டு வெளியே ஓடிவந்தார். இதை யாரோ போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருக்கிறார். இந்த போட்டோதான் தற்போது வைரலாகி வருகிறது. அந்த போலீஸ்காரர் நேத்ரேஷ் ஷர்மாவுக்கு பொதுமக்களின் பாராட்டு குவிந்து வருகிறது. போலீஸ் உயர் அதிகாரிகளும் நேத்ரேஷ் ஷர்மாவை அழைத்து பாராட்டி, கவுரவித்திருக்கிறார்கள்.

அதேசமயம், இவர் ஹிந்து என்பதால் இந்த போட்டோவை தமிழகத்திலுள்ள மீடியாக்கள் எதுவும் வெளியிடவில்லை. இதே வேற்று மதத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் என்றால், ஹிந்து குழந்தையை காப்பாற்றிய முஸ்லிம் போலீஸ்காரர் என்று பட்டிமன்றமே நடத்தி இருப்பார்கள் என்று நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.


Share it if you like it