ரூ.2,000 நோட்டு வாபஸ்… பிகிலிகளுக்குத்தான் பாதிப்பு: ஆன்ட்டி பிகிலி (பிச்சைக்காரன்) விஜய் ஆண்டனி ‘நச்’!

ரூ.2,000 நோட்டு வாபஸ்… பிகிலிகளுக்குத்தான் பாதிப்பு: ஆன்ட்டி பிகிலி (பிச்சைக்காரன்) விஜய் ஆண்டனி ‘நச்’!

Share it if you like it

2,000 ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்டதில் மக்கள் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்கள். பிகிலிகளுத்தான் பாதிப்பு என்று பிச்சைக்காரன் படத்தின் இயக்குனர் விஜய் ஆண்டனி தெரிவித்திருக்கிறார்.

நடிகர், இசையமைப்பாளர், இயக்குனர் என பல அவதாரங்களுக்குச் சொந்தக்காரர் விஜய் ஆண்டனி. இவர் இயக்கிய படங்கள் அனைத்துமே ஹிட்டடித்தாலும், பிச்சைக்காரன் படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இப்படத்தில் அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுக்கள்தான் பதுக்கலுக்கு வழி வகுக்கிறது என்றொரு காட்சி இடம் பெற்றிருக்கும். இப்படிப்பட்ட நிலையில், இப்படம் வெளியானபோது இந்தியாவில் 100, 5,00, 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. தற்போது பிச்சைக்காரன் 2-ம் பாகம் வெளியாகி இருக்கிறது. இந்த சூழலில், தற்போது 2,000 ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், பிச்சைக்காரன் 2 வெற்றியை அம்பத்தூரிலுள்ள பிரபலமான தியேட்டரில் ரசிகர்களுடன் கொண்டாடினார் விஜய் ஆண்டனி. அப்போது, ஏற்கெனவே பிச்சைக்காரன் படம் வெளியானபோது 100, 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது குறித்தும், தற்போது பிச்சைக்காரன் 2 படம் வெளியாகி இருக்கும் நிலையில், 2,000 ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்டது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த விஜய் ஆண்டனி, அதிக மதிப்புடைய 100, 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டபோது மகிழ்ச்சியடைந்தேன்.

ஆனால், அதன் பிறகு 2,000 ரூபாய் அறிமுகம் செய்யப்பட்டபோது, வருத்தமாக இருந்தது. தற்போது 2,000 ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்டிருக்கிறது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை மக்களுடைய நல்லதுக்காகத்தான் செய்திருக்கிறார்கள். ஆகவே, மக்களும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்கள். யாரெல்லாம் பணத்தை பதுக்கி வைத்திருக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் இது பாதிப்பு. அதாவது பிகிலிகளுக்குத்தான் பாதிப்பு. ஆன்ட்டி பிகிலிகளுக்கு பாதிப்பில்லை என்று கூறியிருக்கிறார்.


Share it if you like it