ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) சார்பில், இரண்டாம் ஆண்டு 21 நாள் பண்புப் பயிற்சி முகாம் புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகர்கள், இதில் கலந்துக் கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்த முகாமின் ஒரு அங்கமாக, மே மாதம் 9 ஆம் தேதி, செவ்வாய்கிழமை மாலை சரியாக 5.20 மணிக்கு, ராஜா திருமண நிலையம், வில்லியனூரில் தொடங்கி பதசஞ்சலன் (சீருடை அணி வகுப்பு ஊர்வலம்) நடைபெற்றது. இந்த அணிவகுப்பு ஊர்வலத்தை புதுச்சேரி மாண்புமிகு வேளாண்மை துறை அமைச்சர் திரு தேனீ ஜெயக்குமார் அவர்கள், கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முகாம் தலைவர் திரு P மணிவாசகம் அவர்களும், முகாமின் வரவேற்புக் குழுத் தலைவர் திரு R அரவிந்தன் அவர்களும், புதுச்சேரி ஆர்.எஸ்.எஸ். கோட்டம் தலைவர் ஆடிட்டர் திரு V செல்வராஜ் அவர்களும் உடன் இருந்தனர்.

