காந்தாராவின் வசூலை முந்துமா  மாளிகைப்புறம்?

காந்தாராவின் வசூலை முந்துமா மாளிகைப்புறம்?

Share it if you like it

காந்தாராவை போன்று பொதுமக்களிடம் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம்தான் மாளிகைப்புறம் என்பது குறிப்பிடத்தக்கது.

எட்டு வயது சிறுமிக்கும் அவளது சூப்பர் ஹீரோ அய்யப்பனுக்கும் இடையேயான உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் மாளிகைப்புறம். எதிர்வரும் டிச., 30 ஆம் தேதி வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில், வெளியாகி பொதுமக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்ற ’காந்தாரா’ திரைப்படம் போன்று இப்படமும் இருக்கும் என்று சினமா விமர்சகர்கள் கூறியுள்ளனர். இப்படத்தின், பெரும்பாலான காட்சிகள் சிறுத்தைகள் மற்றும் யானைகள் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. படத்தின், டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பொதுமக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்று இருந்தது. இப்படத்தின், ஹீரோவாக உண்ணி முகுந்தன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it