ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சேலம் அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் சையது இப்ராகிம் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளம்பெண், ஓசூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்த சூழலில், கடந்த வாரம் லீவு எடுத்துக்கொண்டு சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்றார். பின்னர், நேற்று ராமநாதபுரம் – ஹூப்ளி வாராந்திர எக்ஸ்ப்ரஸ் ரயிலில் தனது தந்தையுடன் ஓசூர் சென்று கொண்டிருந்தார். ரயில் சேலம் அருகே வந்தபோது, இளம்பெண்ணின் இருக்கைக்கு மேல் சீட்டில் படுத்திருந்த நபர் கீழே இறங்கி இருக்கிறார். அப்போது, இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் கூச்சலிட்டவே, அவருடைய தந்தை உள்ளிட்ட சக பயணிகள் பதறியடித்துக் கொண்டு எழுந்தனர். பின்னர், மேற்கண்ட நபரை பிடித்து தர்ம அடி கொடுத்ததோடு, ரயில் டிக்கெட் பரிசோதகரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபர் ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். ரயில்வே போலீஸாரின் விசாரணையில், அந்த நபரது பெயர் சையது இப்ராஹிம் என்பது, 57 வயதுடைய அவர், சேலம் சூரமங்கலம் அருகேயுள்ள பாரதிநகரைச் சேர்ந்தவர் என்பதும், சேலம் அரசு கலைக் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில், கல்லூரி உதவி பேராசிரியர் சையது இப்ராஹிம் மீது பாலியல் டார்ச்சர் வழக்கு பதிந்து கைது செய்த போலீஸார், அவரை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். அடங்க மாட்டேங்கிறாங்களே…