நித்திய தர்மமாய் நிலைத்து நிற்கும் சனாதன தர்மம் – பூவுலகின் நலன் வேண்டி வழிகாட்டும் தர்மம்

நித்திய தர்மமாய் நிலைத்து நிற்கும் சனாதன தர்மம் – பூவுலகின் நலன் வேண்டி வழிகாட்டும் தர்மம்

Share it if you like it

நம் பாட்டிகள் தலைமுறை வரை பால்ய விவாகம் உண்டு. ஆனால் நெருங்கிய குடும்ப உறவுகளில் மட்டுமே திருமண தொடர்புகள் இருக்கும்.

அதாவது பெண் பருவமடையும் முன்பே பால்ய விவாகம் செய்து வந்த காலகட்டம் அது. பத்து வயதில் திருமணம் முடித்த பாட்டி தலைமுறை பெண் குழந்தைகள் திருமணம் முடித்த பிறகும் வீதியில் விளையாடிக் கொண்டு தங்களது தாய் வீட்டிலேயே வளரும். திருமணம் முடிந்த பல வருடங்களுக்கு பிறகு தான் அந்த பெண் குழந்தை பருவமடையும். அந்த காலத்தில் பதினெட்டு முதல் இருபது வயது காலகட்டத்தில் தான் பெண்கள் பூப்படைவார்கள்.

நமக்கு முந்தைய தலைமுறை யில் 16-18 வயது என்று இருந்தது .நம்மில் 13-15 என்று இருந்த வயது வரம்பு இன்று எப்படி இருக்கிறது என்று உங்களுக்கே தெரியும்?

(உணவு நஞ்சு கலாச்சார விளைவு) சரி விஷயத்திற்கு வருவோம் . பெண் குழந்தை பால்ய விவாகம் முடிந்து பல வருடங்கள் கழித்து பருவம் அடைந்தால் அந்த பெண் குழந்தையின் பெற்றோர் புகுந்த வீடு உறவுகள் மற்றும் சீர் செய்ய வேண்டிய தாய் மாமன் இவர்கள் அனைவரும் ஒன்று கூடி அந்த பெண்ணிற்கு எண்ணெய் ஸ்நானம் – புட்டு வடை சாற்று – புண்ணியா வதனம் – மஞ்சள் நீராட்டு விழா உள்ளிட்ட வற்றை நிறைவேற்றி

அதன். பிறகே அந்த பெண் திருமணம் செய்த ஆண் மகனோடு இல்லற வாழ்க்கையை தொடங்க ஆசிர்வதிப்பார்கள் .அப்போதைய கால கட்டத்தில் தாய் மாமன் அத்தைமகன் என்ற வகையில் நெருங்கிய உறவிலேயே திருமணம் நடக்கும் . அதனால் மஞ்சள் நீராட்டு விழா என்பது குடும்பத்திலேயே முடிந்து விடும் .

ஆனால் அடுத்த தலைமுறை களில் (நம் தாயார் ) ஒரளவு கல்வி அறிவு பால்ய விவாக ஓழிப்பு குழந்தைகள் இறப்பு குறைந்த காரணங்களால்

பெண்கள் பருவம் எய்திய பிறகே திருமணம் என்ற பேச்சு வரும். ஆண்கள் பெரும்பாலும் கல்வி கற்று ஆசிரியர் காவல் துறை இராணுவம் வருவாய் துறை வங்கி பணிகள் என்று நல்ல பதவிகளில் இருப்பார்கள். (அரசு வேலை வீடு தேடி வந்த காலம் அது) அதன் காரணமாக குடும்பங்கள் சொந்த ஊரில் இருந்து பல ஊர்களில் மவட்ட மாநில எல்லையை கடந்து வாழ்ந்த காலகட்டம் அது .(தொலைக்காட்சி. லேண்ட் லைன் இரண்டுமே அபூர்வம்) தொலை தொடர்பு சாதனங்கள் இல்லாத தகவல் தொடர்பு என்பது அரிதான விஷயம் .ஊடகம் சமூக வலைத்தளங்கள் மேட்ரி மோனி எதுவும் கிடையாது .

அந்த காலகட்டத்தில் ஒரு பெண் குழந்தை பருவம் எய்தி விட்டால் அதை அனைத்து உறவினர்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இருந்தது.

அதற்கான காரணம் இரண்டு .முதலாவது காரணம் எங்கள் வீட்டில் இருந்த பெண் குழந்தை பருவம் எய்தி விட்டாள். நாங்கள் எங்கள் பெண்ணிற்கு திருமணம் செய்ய தயாராக இருக்கிறோம். எங்களோடு சம்பந்தம் செய்ய உரிமை உள்ள உறவினர்கள் கல்யாணம் பேச வரலாம் என்ற சமிக்ஞை .(நாடாளும் மன்னன் ஆனாலும் பெண் வீட்டார் படியேறி போய் பெண் கேட்க வேண்டும் அது தான் நம் சம்பிரதாயம்) இரண்டாவது என்னுடைய பெண் குழந்தை பருவம் அடைந்து விட்டாள்‌. அதனால் எங்களின் குடும்ப பொறுப்பு முன்பை விட கூடி விட்டது . இனி நாங்கள் நினைத்தபடி முன்பு போல உறவினர்கள் வீடுகளில் வந்து தங்க முடியாது. திருவிழா – திருமணம் போன்ற விசேஷங்களுக்கு கூட அபூர்வமாக தான் வர முடியும். பெரும்பாலும் ஆண்களே வருவார்கள். அதை யாரும் தவறாக புரிந்து கொள்ள கூடாது என்ற சமிக்ஞை. ஏனெனில் பருவம் வந்த பெண் பிள்ளையை வீட்டிலும் தனியே விட்டு செல்ல கூடாது. போகும் இடமெல்லாம் கூட அழைத்து போவதும் கூடாது என்ற வரைமுறை.

பெண் பருவமடைவது அரிவை தெரிவை பேதை பெதும்பை என்ற நிலையை கடந்து மங்கை என்ற நிலையில் மாறும் காலம் .

கன்னிகா ஸ்நானம் என்பது பெண் தெய்வத்திற்கு இணையான ஸ்நானம். அதற்குரிய புண்யா வதனம் என்ற புனிதப்படுத்தும் சடங்கை செய்த பின் அவரவர் வழக்கப்படி மஞ்சள் நீராட்டு விழா செய்வது வழக்கம் .புதியதாக ஒரு விகரக திருமேனி யை கொண்டு வரும் போது ஆலய பிரவேசம் செய்யும் முன்பாக அல்லது கருவறையில் பிரதஷ்டை செய்யும் முன்பாக புண்யாவதனம் செய்வது நம் சாஸ்திர சம்பிரதாய முறை.இந்த வரைமுறைகள் எல்லாம் ஆண்டி முதல் அரசன் வரை அனைவருக்கும் பொதுவே.

பெண்ணின் முதல் மாதவிடாயை திருவிழா போல கொண்டாடுவது உண்மை தான். ஆனால் அதுவும் நீங்கள் சொல்லும் தீட்டு தான்.

பருவமடைந்த பெண் சமயலறை பூஜை அறை தானிய சேமிப்பு அறை பணம் நகை உள்ளிட்ட பொருள் இருக்கும் எந்த ஒரு அறைகளிலும் பிரவேசிக்க முடியாது.

துடைப்பம் முறம் குப்பை கூடை உள்ளிட்ட நீசமான பொருள்களை தொட கூடாதுஎன்ற கடுமையான கட்டுப்பாடுகள் இருந்ததும் இருப்பதும் உண்மைதான் ஆனால் அவை எதுவும் பெண்களை சிறுமைப்படுத்தும் கொடுமைகள் இல்லை. மாறாக பெரும் இயற்கை உபாதையான அந்த நேரத்தில் பெண்கள் உடலளவிலும் மனதளவிலும் பலவீனமாக உணர்வார்கள். உடலில் சுரக்கும் ஹார்மோன்களிலும் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழும் அதன் காரணமாக ஒரு மன அழுத்தமும் இருக்கும் இதில் எல்லாம் இருந்து விடுபடவும் உபாதையான நேரத்தில் பூரண ஓய்வில் இருக்கவுமே பெண்களை தனிமையில் ஓய்வெடுக்கும் படி கட்டாயப்படுத்தப்பட்டது.

பெண்ணை தெய்வமாக வணங்கும் சனாதன தர்மம் பருவமடைந்த ஒரு பெண் குழந்தையை அவரவர் குலதெய்வம் போல அவரவர் குடும்ப வழக்கப்படி விழா எடுத்துக் கொண்டாட வைத்தது. இதில் ஆண்டியின் மகளானாலும் அரசனின் மகளானாலும் மகள் என்பவள் குடும்பத்தின் கௌரவத்தின் அடையாளமாக பெருமிதத்தின் சின்னமாக வம்சத்தின் பொக்கிஷமாக மதிக்கப்பட்டாள் அதன் வெளிப்பாடுதான் அவளின் பூப்பெய்தல் என்னும் பெண்மை தாய்மை என்னும் பூரணத்துவத்தின் முதல் அடையாளமான பருவம் ஏதுவதை உற்சவம் போல கொண்டாடும் வெளிப்பாடு.

முதல் நாள் சொர்ண குளியல் –

மூன்றாம் நாள் ஒரு எண்ணேய் குளியல்

ஐந்தாம் நாள் ஒரு எண்ணெய் குளியல்

ஏழாம் நாள் ஒரு எண்ணெய் குளியல் முடிந்த பின் புண்யா வதனம் செய்த பிறகு தான் அந்த பெண் வழக்கம் போல இருக்க முடியும் .மஞ்சள் நீராட்டு விழா முடித்த பிறகு தான் ஆலய பிரவேசம் செய்ய முடியும். திருமணம் சீமந்தம் உள்ளிட்ட விசேஷங்கள் கர்ம காரியங்களுக்கு பெண்ணின் பெற்றோர் உள்ளிட்ட குடும்பம் போய் கலந்து கொள்ள முடியும்.

அந்த முதல் மாதவிடாயின் போது தீட்டு என்று ஒதுக்கி வைக்காமல் கோவிலிலா கொண்டு வைத்தார்கள்? முதன் முதலாக வரும் போது புண்யா வதனம் செய்து விடுவதால் அடுத்தடுத்து வரும் போது மூன்று நாட்கள் ஒதுங்கி இருந்து எண்ணெய் ஸ்நானம் செய்து விட்டு வீட்டில் சகஜமாக இருப்பார்கள்.

ஐந்தாம் நாள் எண்ணெய் ஸ்நானம் செய்து விட்டு பூஜை அறை ஆலயம் போவார்கள் . இதுவே திருமணம் முடிந்து கருவுற்று சீமந்தம் செய்து குழந்தை பிறந்த பிறகு ஒன்பதாம் நாள் தனது முதல் குழந்தையுடன் தாய்க்கும் சேர்த்து வீட்டில் தீட்டு கழித்து எள் பொடி வெல்லம் வைத்து குலதெய்வத்தை வழிபட்ட பிறகு

அடுத்தடுத்து பெண்கள் தலைக்கு குளித்து வீட்டில் சகஜமாக இருப்பார்கள் .ஆனால் கடைசி மாதவிடாய் வரை ஐந்து நாட்கள் வரை ஆலய பிரவேசம் விசேஷங்களை முன் நின்று செய்வது கிடையாது .

திருமணத்தில் பாத பூஜை – மனை கோலம் – மனை பூஜை – சீமந்த வீட்டில் மனை பொங்கல் – கிரக பிரவேசம் – – பூஜை – – – ஹோமங்கள் – வேள்விகள் – திதி தர்ப்பணம் – சிரார்த்தம் – காரியம் முடிந்ததும் காரிய கலசம் எதிர் நின்று வாங்குவது – கோவில் கும்பாபிஷேகம் – வாஸ்து பூஜை – மாங்கல்ய தட்சணை – குலதெய்வ வழிபாடு – மாங்கல்ய பெருக்கு -இதிலெல்லாம் பெண்கள் மாதவிடாய் ஐந்தாம் நாள் கடந்த பிறகு தான் கலந்து கொள்வார்கள் . நடு வயது பெண்கள் எனில் குறைந்த பட்சம் மூன்றாம் நாள் எண்ணெய் ஸ்நானம் செய்து விட்டு பங்கேற்பார்கள்.

ஏனெனில் மாதவிடாய் காலத்தில் பெண்கள் உடலில் இருந்து எதிர் மறை ஆற்றல் காந்த அதிர்வுகள் பெருமளவில் வெளியேறும் .

ஆலயங்கள் பூஜை அறையில் நேர் மறை அதிர்வுகள் எப்போதும் நிரம்பி இருக்கும். நல்ல காரியம் நடக்கும் இடங்களில் எதிர் மறை சக்திகளை வெளியேற்றி நேர் மறை அதிர்வுகளை நிரம்ப செய்யவே கணபதி ஹோமம் கோ பூஜை வேத மந்திரங்கள் இறை நாம பாராயணம் உள்ளிட்டவை செய்வது வழக்கம். அது போன்ற இடங்களில் மாதவிலக்கு இருக்கும் பெண பிரவேசித்து அங்கு எதிர் மறை சக்திகளை பரவ விடுவது பெரும் பாவம் . அனர்த்தம் என்று நம் முன்னோர் நினைத்தார்கள். உடல் வலி – உதிரப்போக்கு என்று இயற்கை உபாதையில் இருக்கும் பெண்களுக்கு எளிதில் நோய் தொற்றும் மற்றவர்களுக்கு கிருமி தோற்றும் ஏற்படும் அபாயமும் இருந்ததால் அந்தப் பெண்ணின் ஆரோக்கியம் கருதியும் மற்றவர்களின் ஆரோக்கியம் கருதியும் மாதவிலக்கின் போது பெண்கள் பாதுகாப்பாக தனிமைப்படுத்தப்பட்டார்கள். இதை அறிவியல் மற்றும் மருத்துவ உண்மைகளை உணரும் யாவரும் உணர முடியும்

உன்னால் நல்லது செய்ய. முடியா விட்டாலும் பரவாயில்லை. கெடுதல் செய்யாமல் இருந்தாலே போதும் நீ இறைவனின் அன்பிற்கு பாத்திரமாக முடியும் என்பது சனாதன தருமம் . அதை வாழ்வியல் நெறியாக பின் பற்றி வந்தவர்கள் நம் மூதாதையர் .அவர்கள் வழியில் நாமும் நம்மால் முடிந்த வரையில் அவற்றை எல்லாம் பின்பற்றி வருகிறோம். நாமும் வாழ வேண்டும் மற்றவரையும் வாழ விட வேண்டும் என்ற மனித தருமத்தின் அடிப்படையில் .

ஆனால் இது தான் நியதி என்று புரிந்து அந்த வரையறைக்குள் வாழும் மனிதனுக்கு மட்டுமே இது புரியும் .

மனைவிக்கு மாதவிலக்கு என்றால் வீட்டில் பூஜை செய்து விட்டு சாப்பிட நேரம் இன்றி அலுவலகம் ஒடும் ஆணுக்கு புரியும் .

பக்கத்து வீட்டில் ஐயப்ப பூஜை நடந்தால் மாதவிலக்கில் இருக்கும் பெண் தானோ தன் பெண்ணோ அந்த வீட்டில் வாசலில் உள்ள கோலத்தை கூட மிதிக்காமல் ஒதுங்கி போகும் பெண்களுக்கு புரியும் .குலதெய்வத்திற்கு பலி பூஜை போட நாள் குறிக்கும் முன்பு கடைசி பஙகாளி வீடு வரை தகவல் கொடுத்து ஏதாவது ஒரு ஏழை பங்காளி வீட்டில் மருமகள் கருவுற்று இருக்கும் விஷயம் தெரிய வந்த உடனே இப்போது பால் பூஜை மட்டும் செய்கிறேன்.

வேறு ஒரு நல்ல நாளில் பலிபூஜை தருகிறேன் இறைவா என்று மனதிற்குள் வேண்டி பால் பூஜை செய்து வரும் அங்காளி – பங்காளி நலம் விரும்பும் நல்ல மனிதர்களுக்கு புரியும் .

காம உணர்ச்சி வந்தால் மனைவி தான் வேண்டும் என்று இல்லை தாயோ சகோதரியோ அவளும் பெண் தானே? . உனது இச்சையை தீர்த்து கொள் என்று வழிகாட்டும் ஒரு தலைவனுக்கும் ஆட்டை கோழியை சாப்பிடற நீ ஏன் மாடு சாப்பிடக்கூடாது? என்று எக்காளமிடும் நர புசி கூட்டத்திற்கும் இது புரியாது . அவர்களுக்கு சனாதனத்தை புரிய வைப்பது நாய் வாலை நிமிர்த்துலதற்கு ஒப்பான செயல். அவர்களும் அவர்களின் மூதாதையரும் செய்த பாவத்திற்கு பலன் தான் அவர்களின் இந்த பிறழ் முரண் சிந்தனை .

மாதலிலக்கை மறைத்து ஆலயம் – விசேஷங்களிவ் பெண்கள் போகும் பாவத்திற்கு பலன் தான் இறைமறுப்பு என்ற பெயரில் தாய் தர்மம் பழிக்கும் வம்சா வழியினர் என்பதை அவர்கள் உணர்ந்தால் நல்லது ஆனால் அவர்களால் உணர முடியாது. அவர்கள் சனாதன தருமம் மீது வாரி இறைக்கும் புழுதியையே உரமாக்கி சனாதனம் நித்திய தர்மாக நிலைத்திருக்கும்.யுகங்கள் கடந்தும் நிலைத்து நிற்கும் நித்திய தர்மம் பரம பவித்திரமான சனாதன தர்மம். போலி பகுத்தறிவு ஒரு நாளும் வீழ்த்த முடியாது. வீழ்த்த நினைக்கும் போலி பகுத்தறிவு இறை துவேஷமும் வீழ்ந்து உரமாகி சனாதனத்தை தழைக்க செய்யும். அதுவே இயற்கை நியதி இறை நியதி.


Share it if you like it