பிரபாகரன் உயிரோடு இருப்பதாக மூத்த அரசியல் தலைவர் பழ.நெடுமாறன் கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து, நெட்டிசன்கள் சீமானை கலாய்த்து வருகின்றனர்.
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக இருப்பவர் பழ.நெடுமாறன். இவர், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில், தஞ்சையில் அவர் பேட்டியளிக்கும் போது இவ்வாறு கூறியிருக்கிறார் ;
விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். பிரபாகரன் உரிய நேரத்தில் வெளிப்படுவார். எப்போது, வருவார் என்பதை அறிய உலக தமிழர்கள் ஆவலாக உள்ளனர். பிரபாகரன் குடும்பத்தினருடன் நான் தொடர்பில் இருப்பதால், அவர்களின் அனுமதியுடன் இதனை நான் கூறுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
பழ.நெடுமாறனின் கருத்தை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
