கடந்த சட்டமன்ற தேர்தல் நேரத்தில் அன்றைய ஆளும் கட்சியிடம் சீமான் ரூ. 60 கோடி பணம் வாங்கியதாக மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் கூயிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர், தேசத்திற்கு எதிராகவும், பிரிவினையை தூண்டும் வகையில் பேச கூடியவர். அதே வேளையில், அயல்நாடுகளில் உள்ள தம்பிகளிடமிருந்து பணத்தை பெற்று கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்வதாக பல்வேறு விமர்சனங்கள் இவர் மீது முன் வைக்கப்படுகின்றன.
அந்தவகையில், மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், சத்தியம் டிவிக்கு அளித்த நேர்காணலில் சீமான் குறித்த திடுக்கிடும் தகவலை கூறியிருக்கிறார். அதாவது, அன்றைய ஆளும் கட்சியான அ.தி.மு.க.விடம், ரூ. 60 கோடி பணத்தை பெற்றுக் கொண்டார். இதையடுத்து, தனது கட்சியின் சார்பில் டம்மி வேட்பாளரை அ.தி.மு.க.விற்கு எதிராக நிறுத்தினார் என பாண்டியன் கூறியிருக்கிறார். இந்த காணொளி தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், விவரங்களுக்கு அந்த லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.