ஆட்சி பொறுப்புக்கு வரும் முன்பு, பிரியாணி கடை, சுண்டல் கடை, ஓசி தேங்காய் கடை மீது தாக்குதல், ஆட்சியில் அமர்ந்த பின்பு அம்மா உணவகம், அம்மா கிளினீக் மீது தாக்குதல், என சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சந்தி சிரிக்கும் நிலையில், பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத அவல நிலையே விடியல் ஆட்சியில் உள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவின் தலைவர் மற்றும் நடிகையுமான காயத்திரி ரகுராம் மீது தி.மு.க-வின் நிர்வாகி ஜெயசந்திரன் என்பவன் மிகவும் தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்து அவமதித்த சம்பவம் மக்கள் மத்தியில் தி.மு.க மீது கடும் கோவத்தை ஏற்படுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து காயத்திரி அவர்கள் தி.மு.க-வின் ஆபாச பேச்சாளர் மீது புகார் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல் நிலையத்தில் புகார் மனு வழங்கி இருந்தார்.
ஆனால் இன்று வரை திமுக நிர்வாகி ஜெயசந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை காலம் தாழ்த்தி வருவதன் மூலம் தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு உள்ளது என்பதை தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியும்,. ஸ்டாலின், தி.முக, கருணாநிதியை, யாரேனும் விமர்சனம் செய்தால். உடனே அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையில், புகார் தெரிவிக்கும் தர்மபுரி எம்பி.
பா.ஜ.க பெண் நிர்வாகியை விமர்சனம் செய்த தி.மு.க ஆபாச பேச்சாளர் மீது எப்பொழுது தான் விடியல் அரசு நடவடிக்கை எடுக்கும். என்பது குறித்து பேசுவாரா? அல்லது வழக்கம் போல திமுக-விற்கு எதிராக பேசும் நபர்களிடம் மட்டும் டுவிட்டரில் கம்பு சுற்றுவாரா? என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்..