சுத்தானந்த பாரதியார் | சுதந்திரம்75 | Freedom75

சுத்தானந்த பாரதியார் | சுதந்திரம்75 | Freedom75

Share it if you like it

சுத்தானந்த பாரதியார்

(விடுதலை எழுச்சிக்கு வித்திட நிறைய தேசபக்திப் பாடல்களை இயற்றியவர்)

1897 ஆம் ஆண்டு, மே மாதம் 11 ஆம் தேதி, சிவகங்கையில் பிறந்தார். இவரது இயற்பெயர் வேங்கட சுப்பிரமணியன்.

தனது இளம் வயதிலேயே, “சுத்தானந்தம்” என்ற ஞானி ஒருவரால், தீட்சை பெற்றார்.

நிறைய நூல்களைக் கற்க வேண்டும் என்ற ஆர்வத்தில், நூலகராகவும், உயர் நிலைப் பள்ளி ஆசிரியராகவும் பணி புரிந்தார்.

ராமேஸ்வரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு நடந்து சென்று கலந்து கொண்டார்.

வ.வே. சு. ஐயர் அவர்கள் நடத்திய, “பாலபாரதி” என்ற இதழ் பணியில், ஆர்வத்துடன் செயல்பட்டார்.

புதுச்சேரியில், மகாகவி பாரதியார் உடன் பலமுறை சந்தித்து, உரையாடி உள்ளார். பின்னர், தனது ஆசிரியப் பணியை விட்டு விலகி, “கதர் ஆடை”யை பரப்பும் செயலில் ஈடுபட்டார்.

அரவிந்தர் ஆசிரமத்தில் தங்கி, “அரவிந்தப் பிரகாசம்”, “கவிக்குயில் பாரதியார்”, “வீரகவி தாகூர்”, “பெரியோர் வரலாறு” போன்ற பல நூல்களை இயற்றி உள்ளார்.

காந்தியடிகள் சென்னை வந்த போது, அவரை வரவேற்கும் குழுவில் இடம் பெற்று, காந்தியின் “கிராம சேவை”யைப் பற்றி உரையாடி உள்ளார்.

நேதாஜியுடன் நேரடித் தொடர்பில் இருந்தார். திரு.வி.க. வுடன் இணைந்து, “கதர் பிரச்சாரம்”, “மதுவிலக்கு”, “தீண்டாமை ஒழிப்பு” போன்ற பிரச்சாரங்களில் ஈடுபட்டார்.

உலக அளவில் விடுதலை சிந்தனைகள் கொண்ட படைப்புகளை, தமிழில் மொழி பெயர்த்து உள்ளார். சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு, இத்தாலி என பல மொழிகளில் புலமை பெற்றவர்.

ஆரிய சமாஜத்தை நிறுவிய தயானந்தரைக் குறித்து, “தயானந்த ஜோதி” என்ற நூலை இயற்றி உள்ளார்.

115 தேசபக்தி பாடல்களைத் தொகுத்து, “தேசிய கீதம்” என்ற நூலை வெளியிட்டு உள்ளார். “பராசக்தி” என்று மகா காவியத்தைப் படைத்தார்.

அவரது பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழி பெயர்ப்பு நூல்கள், இன்னும் அச்சு ஆகாமலே இருக்கின்றது.

விடுதலை எழுச்சிக்கு வித்திட்ட, முக்கியமான தலைவர்களில் ஒருவர், யோகி சுத்தானந்த பாரதியார்.


Share it if you like it