நீ படிக்கும் போது கூட தான் நீட் இல்லையே! நீ டாக்டர் ஆகிட்டியா? இல்ல தற்கொலை செஞ்சுகிட்டியா! தி.மு.க உ.பி-க்கு பல்பு கொடுத்த ஷியாம் கிருஷ்ணசாமி..!

நீ படிக்கும் போது கூட தான் நீட் இல்லையே! நீ டாக்டர் ஆகிட்டியா? இல்ல தற்கொலை செஞ்சுகிட்டியா! தி.மு.க உ.பி-க்கு பல்பு கொடுத்த ஷியாம் கிருஷ்ணசாமி..!

Share it if you like it

நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறி ஆட்சியில் அமர்ந்த தி.மு.க., கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் இன்று வரை திணறி வருகிறது. இதனை தொடர்ந்து தி.மு.க-வின் ஆசி பெற்ற நீதிபதியை ஸ்டாலின் தலைமையிலான அரசு நீட் தேர்வு பற்றி ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வழங்குமாறு ஏ.கே.ராஜனுக்கு உத்தரவு பிறப்பித்து இருந்து.

இதனை தொடர்ந்து நீதிபதி ஏ.கே.ராஜன் குழு தமிழக அரசுக்கு அளித்த அறிக்கை குறித்த விவரங்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவ்வறிக்கையில் தி.மு.க-வின் எண்ணத்தை மட்டுமே நீதிபதியின் அறிக்கை பிரதிபலிப்பதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி அவர்கள் நீதிபதி அளித்த நீட் அறிக்கை குறித்து தனது கருத்தினை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இதற்கு கழக கண்மணி ஒருவர் தெரிவித்த கருத்திற்கு தக்க பதிலடியை ஷியாம் அவருக்கு கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it