நெற்றியில் விபூதி… கழுத்தில் ருத்ராட்சம்… யாழில் ஜொலிக்கும் திருவள்ளுவர் சிலை!

நெற்றியில் விபூதி… கழுத்தில் ருத்ராட்சம்… யாழில் ஜொலிக்கும் திருவள்ளுவர் சிலை!

Share it if you like it

யாழ்பாணத்தில் திறக்கப்பட்டிருக்கும் திருவள்ளுவர் சிலைதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இலங்கை நாட்டின் யாழ்ப்பாணம் நகரில் தலைமை தபால் நிலையம் முன்பாக, புதிதாக திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது. சிலையை கலாநிதி.ஆறுதிருமுருகன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் அ.சிவபாலசுந்தரன், யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறீசற்குணராஜா, சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன், யாழ் மாநகர மேயர் து.ஈசன், முன்னாள் மேயர்கள் வி.மணிவண்ணன், இ.ஆனோலட், யாழ் மாநகர ஆணையர் இ.த.ஜெயசீலன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இந்த சிலையின் நெற்றி முழுவதும் விபூதி பூசப்பட்டும், கழுத்தில் ருத்ராட்சம் அணிவிக்கப்பட்டும் இருக்கிறது. இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் இதுதான் உண்மையான திருவள்ளுவர். இலங்கையில் இருக்கும் ஹிந்துக்கள்தான் உண்மையான ஹிந்துக்கள். திருவள்ளுவரை தத்ரூபமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால், தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருவள்ளுவர் சிலையை வைத்திருக்கிறார்கள். அச்சிலை ஏதோ கடமைக்காக வைக்கப்பட்டது போல் இருக்கிறது என்று கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.


Share it if you like it