ஶ்ரீனிவாச ராமானுஜன்!

ஶ்ரீனிவாச ராமானுஜன்!

Share it if you like it

நம் அனைவருக்குமே ஒவ்வொரு துறையில் ஆர்வம் இருக்கும். விருப்பப்பட்ட துறையில் நாம் கூர்ந்து படித்தால் நம்முடைய பெயரும் வரலாற்றில் இடம் பெறும். அந்த வகையில் கணித மேதை ஶ்ரீனிவாச ராமானுஜன் தனக்கென கணிதத்துறையில் தனி இடம் பிடித்தவர்.

இவர் டிசம்பர் 22 1887ல் ஈரோடில் ஶ்ரீனிவாசன்- கோமளம் என்ற மிக ஆச்சாரமான பிராமண தம்பதியர்க்கு மகனாக பிறந்தார். 3 வயது வரையில் பேசும் திறன் இல்லாமல் இருந்தார். நாமக்கல் ஶ்ரீ நாமகிரித்தாயாரின் அருளால் பேசும் திறன் பெற்றார். தாத்தா, தந்தை ஆகியோரின் துணிக்கடையின் எழுத்தர் பணிகளால் ஏழ்மையான சூழ்நிலையில் தான் அவருடைய இளமைக்காலம் இருந்தது.

ராமானுஜன் உடன் பிறந்தோர் மிக இள வயதில் இறந்ததாலும், அவருடைய தந்தையின் அதிக வேலைப்பளுவாலும், தாயிடம் மிக பாசமாக இருந்தார். அவரும் தனக்கு தெரிந்த புராணங்கள், இதிகாசங்கள், நன்னெறி கதைகள் என மகனுக்கு சொல்லிக்கொடுத்தார்.

ஆரம்ப படிப்பு 1892-ல் காஞ்சிபுரத்தில் துவங்கி பின்னர் சில மாதங்களில் குடும்பம் கும்பகோணத்துக்கு புலம் பெயர அங்கிருந்த கல்யாணம் என்ற தொடக்கப்பள்ளியில் சேர்ந்து 1897ல் முதலிடம் பெற்று துவக்க கல்வி முடித்து கும்பகோணம் நகர் உயர்நிலைப்பள்ளியில் 6ஆம் வகுப்பு சேர்ந்தார்.
அப்போதில் இருந்தே கணிதம் கற்க தொடங்கியவர், தன் வீட்டில் குடி இருந்த கல்லூரி மாணவர்களிடம் இருந்த “எஸ். எஸ். லோனி” எழுதிய கோணவியல் புத்தகத்தை வாங்கி படித்து 13ஆம் வயதில் தேர்ச்சியடைந்தார்.

அவர் தன்னுடைய 14 வயது பள்ளி வாழ்க்கைக்குள் தகுதிச்சான்றிதழ்கள், கல்வி விருதுகள் என வாங்கி குவித்தார். அவருடைய 16 வயதில் அவர் படித்த “எ சினாப்ஸிஸ் ஆஃப் எலமண்ட்ரி ரிசல்ட்ஸ் இன் ப்யூர் அண்ட் அப்லைட் மாதமேடிக்ஸ்” என்ற எளிமையான ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணித முடிவுகளின் தொகுப்பான புத்தகம், இவருக்கு கணிதத்தின் மேல் வைத்திருந்த ஆர்வத்தை அதிகமாக்கியது.

ஈடு இணையில்லாத அவருடைய கணித ஆர்வத்தை கண்டு அவருடைய சகாக்கள் அரிதாக புரிந்து கொண்டதாகவும், பிரமித்து நின்றதாகவும் குறிப்பிட்டு உள்ளனர். கும்பகோணம் அரசுக்கல்லூரி ராமானுஜனுக்கு உதவித்தொகை வழங்கவே 1904ல் அவர் கணிதத்தில் ஆழ்ந்த ஆராய்ச்சி மேற்கொண்டார். கணிதத்தின் மேல் இருந்த ஆர்வத்தில் மற்ற பாடங்களில் அவர் கவனம் செலுத்தாததால் அவர் அதில் தோல்வியடைய கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார்.

நண்பர்களின் உதவியால் கணித கண்டுபிடிப்புகளை பூர்த்தி செய்யவும், அதற்கான ஆதரவு செய்து வாழ்க்கை தொடங்கினார். 1905ல் மனம் வெறுத்து விசாகப்பட்டினம் போனவர், சில மாதங்கள் ராஜமுந்திரியில் இருந்து, பின்னர் 1906ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்தார். அங்கும் கணிதத்தின் மேல் இருந்த அளவுக்கடந்த காதலால் மற்ற பாடங்களை கவனிக்காததன் விளைவால் தன்னுடைய “Fellow of Arts” தேர்வில் தோல்வி அடைந்து மற்றும் ஒரு வருடம் கழித்து “F A” பட்டம் இல்லாமலே கல்லூரியில் இருந்து வெளியேறினார்.

தன்னுடைய சுய முயற்சியால் ஆராய்ச்சிகளை தொடர்ந்ததால் கடுமையான வறுமை மற்றும் பட்டினியால் வாழ்ந்து வந்தார். 1908ல் பின்னங்கள் மற்றும் மாறுபட்ட தொடரை படிக்கும் போது அவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டு 1909ல் அறுவை சிகிச்சை செய்தாலும் அதில் இருந்து மீண்டு வர சில காலம் பிடித்தது. அதே ஆண்டு ஜுலை 14ஆம் தேதி ஜானகி என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார்.

1910ல் 23வயதான ராமானுஜனுக்கும் இந்திய கணிதவியல் சங்க நிறுவனர். திரு. வி.ராமஸ்வாமி ஐயருக்கும் இடையே நடந்த சந்திப்புக்கு பின் அவருடைய பெயர் அங்கீகாரம் பெற ஆரம்பிக்க, இது மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக சேர வழி வகுத்தது.

1913-ல் சென்னை பல்கலைக்கழகம் அவருக்கு 2 வருடங்கள் உதவித்தொகை வழங்கியது. 1914 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்டு ஏப்ரல் 14 ஆம் தேதி அவர் லண்டனில் இறங்கும் போது, ​​நெவில் ஒரு காருடன் அவருக்காகக் காத்திருந்தார். நான்கு நாட்களுக்குப் பிறகு, நெவில் கேம்பிரிட்ஜில் செஸ்டர்டன் சாலையில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

ராமானுஜன் உடனடியாக லிட்டில்வுட் மற்றும் ஹார்டியுடன் தனது பணியைத் தொடங்கினார். ஆறு வாரங்களுக்குப் பிறகு, ராமானுஜன் நெவில்லின் வீட்டை விட்டு வெளியேறி, ஹார்டியின் அறையிலிருந்து ஐந்து நிமிட நடை தூரத்தில் உள்ள வீவெல்ஸ் கோர்ட்டில் தங்கினார்.

ஹார்டியும் லிட்டில்வுட்டும் ராமானுஜனின் குறிப்பேடுகளைப் பார்க்கத் தொடங்கினர் . ஹார்டி ஏற்கனவே முதல் இரண்டு கடிதங்களில் ராமானுஜனிடமிருந்து 120 தேற்றங்களைப் பெற்றிருந்தார், ஆனால் குறிப்பேடுகளில் இன்னும் பல முடிவுகளும் தேற்றங்களும் இருந்தன. ஹார்டி சில தவறு என்று பார்த்தார், மற்றவை ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டன, மற்றவை புதிய முன்னேற்றங்கள்.

ராமானுஜன் ஹார்டி மற்றும் லிட்டில்வுட் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தினார். லிட்டில்வுட் கருத்து தெரிவிக்கையில், “அவர் குறைந்த பட்சம் ஒரு ஜேக்கபி என்று என்னால் நம்ப முடியும் ” ஹார்டி “அவரை யூலர் அல்லது ஜேக்கபியுடன் மட்டுமே ஒப்பிட முடியும்” என்று கூறினார்.

ராமானுஜன் ஹார்டி மற்றும் லிட்டில்வுட் உடன் இணைந்து கேம்பிரிட்ஜில் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் கழித்தார் , மேலும் அவரது கண்டுபிடிப்புகளின் ஒரு பகுதியை அங்கு வெளியிட்டார். ஹார்டி மற்றும் ராமானுஜன் மிகவும் மாறுபட்ட ஆளுமைகளைக் கொண்டிருந்தனர். அவர்களின் ஒத்துழைப்பு பல்வேறு கலாச்சாரங்கள், நம்பிக்கைகள் மற்றும் பணி பாணிகளின் மோதலாக இருந்தது. முந்தைய சில தசாப்தங்களில், கணிதத்தின் அடித்தளங்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டன மற்றும் கணித ரீதியாக கடுமையான தேவைஅங்கீகரிக்கப்பட்ட சான்றுகள். ஹார்டி ஒரு நாத்திகர் மற்றும் ஆதாரம் மற்றும் கணித கடுமையின் அப்போஸ்தலராக இருந்தார், அதேசமயம் ராமானுஜன் ஆழ்ந்த மதவாதியாக இருந்தார், அவர் தனது உள்ளுணர்வு மற்றும் நுண்ணறிவுகளை மிகவும் வலுவாக நம்பியிருந்தார்.

ஹார்டி ராமானுஜனின் கல்வியில் உள்ள இடைவெளிகளை நிரப்பவும், அவரது உத்வேகத்திற்கு இடையூறு விளைவிக்காமல், அவரது முடிவுகளை ஆதரிக்க முறையான சான்றுகள் தேவைப்படுவதை அவருக்கு வழிகாட்டவும் முயற்சி செய்தார். கேம்பிரிட்ஜ்ல் உள்ள ட்ரினிட்டி காலேஜ் அவருடைய ஆர்வத்தை தூண்டவே அதன் மூலம் ஹார்ட்டி- ராமானுஜன் கூட்டணி முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டு ப(n) asympotitic formula for p(n) என கொடுத்தார்.

ராமானுஜன் நோய்வாய்ப்பட்டு இருந்த போது அவரை பார்க்க சென்ற ஹார்டி தான் பயணித்த டாக்ஸி என் 1729 என குறிப்பிட்டு அது ராசியான எண் அல்ல என கூற ராமானுஜனோ இல்லை அது மிக ஸ்வாரஸ்யமான எண், இரண்டு கனசதுரங்களின் கூட்டுத்தொகையாக இரண்டு வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்தக்கூடிய மிகச்சிறிய எண் என கூறி ஆச்சரியம் ஏற்படுத்தியுள்ளார். அதனால் “1729” என்ற எண் ஹார்டி- ராமானுஜன் எண் என அறியப்படுகிறது.

மார்ச் 16ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்ழகத்தில் அறிவியலுக்கான இளங்கலை ஆராய்ச்சி பட்டம் பெற்றார். ராமானுஜன் மிக கூச்ச சுபாவம் மற்றும் அமைதியான, எளிமையான, இனிமையாக நடத்தை கொண்ட, கண்ணியமான மனிதராக விவரிக்கப்படுகிறார். தன்னுடைய குல தெய்வம் நாமகிரித்தாயாரால் தான் தன்னுடைய புத்திசாலித்தனம் கிடைத்ததாக தாயாரை கொண்டாடுவார். தன்னுடைய ஆராய்ச்சிப்பணிகளில் தாயாரையே பார்த்ததாக குறிப்பிட்டுள்ளார்.

சைவ உணவு மட்டுமே சாப்பிட்டதால் இங்கிலாந்து சென்ற ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு உணவு பிரச்சினை இருந்து வந்தது. முதலாம் உலகப்போர் வெடித்ததால் இந்த உணவு பிரச்சினை கடுமையான ரேஷனாக மாறிய காரணத்தால் இன்னும் அதிகமாகியது. அவருக்கு காசநோய், கடுமையான விட்டமின் குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர் ஒரு சானடோரியத்தில் சேர்க்கப்பட்டார்.

1917-ல் ஏற்கனவே இருந்த உடல் உபாதைகள் மீண்டும் தலைத்தூக்கவே இந்தியா திரும்பினார். உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு செப்டம்பரில் சிறிது முன்னேற்றம் அடைந்தும் 1920 ஏப்ரல்6ல் தன்னுடைய 33ஆம் வயதில் அமரத்தன்மையை அடைந்தார். அதன்பின் அவருடைய சகோதரர் திரு. நாராயணன் ராமானுஜனின் மீதம் இருந்த கையேடுகளின் குறிப்புகளை தொகுத்தார்.

அவர் இறந்தபின் அவருடைய மனைவி ஜானகி அம்மாள் 1931ல் சென்னை திருவல்லிக்கேணிக்கு வந்து அங்கேயே இருந்து மெட்ராஸ் பல்கலைக்கழக ஊதியம், தையல்கலை மூலமாக தன் வாழ்க்கையை நடத்தினார். பின்னர் 1950ல் ஒரு மகனை தத்தெடுத்தார்.

அவருடைய பிற்காலங்களில் ராமானுஜனின் முன்னாள் முதலாளியான போர்ட் ட்ரஸ்டிடமிருந்து அவருக்கு வாழ்நாள் பென்ஷன் வழங்கப்பட்டது. மேலும் இந்திய தேசிய அறிவியல் அகாடமி, தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்து அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது.

ராமானுஜனின் பொது அங்கீகாரத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஜானகி அம்மாளை சந்திப்பதை முக்கிய கணிதவியலார்களான ஜார்ஜ் ஆன்ட்ரூஸ், புருஸ். சி பெர்னாட், பெலா பொல்லோபாஸ் ஆகியோர் வழக்கமாக கொண்டிருந்தனர். 1994-ல் ஜானகி அம்மாளும் இறைவனின் பதத்தை பற்றினார்.

சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இன்றி மிக வியப்பூட்டும் வகையில் கணித அடிப்படையான உண்மைகளை கண்டறிந்தவர் 1914-18 இந்த காலக்கட்டத்தில் 3000 அதிகமான கணித தேற்றங்களை கண்டுபிடித்தார். இவர் கண்டுபிடித்து கூறிய ஆழ் உண்மைகள் இன்றும் அடிப்படை இயற்பியல் மற்றும் பொறியியல் துறை வரை உயர்மட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது

–திருமதி. சுபா பாலாஜி


Share it if you like it