நீட் தேர்வு ரத்து ரகசியத்தை இப்பவாச்சும் சொல்லுங்க: உதயநிதியிடம் கேட்கும் அரசியல் விமர்சகர் ஸ்ரீராம்!

நீட் தேர்வு ரத்து ரகசியத்தை இப்பவாச்சும் சொல்லுங்க: உதயநிதியிடம் கேட்கும் அரசியல் விமர்சகர் ஸ்ரீராம்!

Share it if you like it

நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியத்தை இப்பொழுதாவது சொல்லுங்க உதயநிதி என்று அரசியல் விமர்சகர் J.V.C.ஸ்ரீராம் காட்டமாக கேள்வி எழுப்பி இருக்கிறார்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம். “நீட் தேர்வை ரத்து செய்வது எப்படி? என்கிற ரகசியம் எங்களுக்கு நன்கு தெரியும்” என்று கூறியவர் உதயநிதி ஸ்டாலின். மேலும், கொஞ்சமாவது வெட்கம், மானம், சூடு, சொரணை இருக்க வேண்டும் என்று முந்தைய அ.தி.மு.க. அரசையும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்பு, நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்பதை நன்கு உணர்ந்த தி.மு.க. அரசு, மக்களின் கவனத்தை திசை திருப்பும் விதமாக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைப்பது, தி.மு.க. எம்.பி.க்கள் மூலம் நாடாளுமன்றத்தில் கோஷம் எழுப்புவது, நீட் தேர்வை ரத்து செய்ய அனைத்துக் கட்சிக் கூட்டம் என கபட நாடகம் நடத்தி வருகிறது.

இந்த நிலையில்தான், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியத்தை இப்பொழுதாவது சொல்லுங்க என்று பிரபல தமிழ் தொலைக்காட்சி ஊடகமான நியூஸ்-7 ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், அரசியல் விமர்சகர் J.V.C.ஸ்ரீராம் காட்டமாக கேள்வி எழுப்பி இருக்கிறார். இதுதான் தி.மு.க.வினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு பதிலளிக்கும் வகையில், நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியம் ஒருவேளை செவ்வாய் கிரகத்தில் இருக்க வாய்ப்பிருக்கலாம் என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

Image
Image
நீட் ரத்து ரகசியம் தெரிந்த உதயநிதி, ஓய்வு பெற்ற நீதிபதியிடம் மனுவுடன் மன்றாடிய பரிதாபம்!
மனு கொடுத்த உதயநிதி

Image

Share it if you like it