2024-ல் அமெரிக்காவை விட இந்திய சாலைகள் தரமானதாக இருக்கும்: நிதின் கட்கரி உறுதி!

2024-ல் அமெரிக்காவை விட இந்திய சாலைகள் தரமானதாக இருக்கும்: நிதின் கட்கரி உறுதி!

Share it if you like it

அமெரிக்க சாலைகளை காட்டிலும் இந்திய சாலைகள் தரமானதாக இருக்கும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.க. மூத்த தலைவரும், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருப்பவர் நிதின் கட்கரி. இவர், கோவாவில் உள்ள சுவாரி கேபிள் பாலத்தை திறந்து வைத்தபோது இவ்வாறு கூறினார் ;

“பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு, எதிர்வரும் 2024 – ஆம் ஆண்டிற்குள் அமெரிக்காவில் உள்ள சாலைக் கட்டமைப்புகளை விட பாரத தேசத்தின் சாலைக் கட்டமைப்புகள் மிகச் சிறப்பானதாக இருக்க வேண்டுமென முடிவு செய்துள்ளோம். அந்த வகையில், பல்வேறு பணிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனை, பல்வேறு தருணங்களில் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க நாடு பணக்கார நாடு என்பதால் அமெரிக்கா சாலைகள் தரமானதாக இல்லை. சாலைகள் தரமாக இருப்பதால்தான் அமெரிக்கா பாணக்கார நாடாக உள்ளது என முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் எஃப். கென்னடி கூறியதை மேற்கோள் காட்டி அவர் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it