கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்கை தாலிபான் தீவிரவிதிகள் கொன்றனர். அச்சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தாலிபான்களுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். ஆனால் கேரளா முதல்வர் மற்றும் தமிழக முதல்வர் ஆகியோர் டேனிஷ் சித்திக் இரங்கல் செய்தியில் தாலிபான்களை கண்டிக்க கூட இல்லை. மேலும் அவர்களின் அடிவருடிகள், வாக்குவங்கியை காப்பாற்றிக்கொள்ள தாலிபான்கள் தெரியாமல் கொன்றுவிட்டனர். அதற்கு அவர்கள் மன்னிப்பு கூறிவிட்டனர் என்றெல்லாம் முட்டுக்கொடுத்தனர். ஆனால் அவரது பிரேத பரிசோதனை அறிக்கை குறித்து அமெரிக்க செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில்
சித்திக் உடலில், 12 குண்டுகள் இருந்தன. மேலும் அவரது பிரேதத்தில் பல இடங்களில் வெட்டு காயங்கள் மற்றும் சிராய்ப்பு போன்ற காயங்கள் இருந்தன. டேனிஷ் சித்திக்கை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பின்னும், தலிபான்களின் வெறி அடங்காமல் அவரது உடலை ஒரு வாகனத்தில் கட்டி இழுத்துச் சென்று அவரது முகம் மற்றும் மார்பின் மீது வாகனத்தை பல முறை ஏற்றி சிதைத்துள்ளனர். இதனால் அவரது முகம் முழுவதுமாக சிதைந்திருந்தது மேலும் வாகன டயரின் அடையாளங்கள் இருந்தன.
தாலிபான்கள் நடத்திய தாக்குதலில் சித்திக் காயம் அடைந்ததாகவும், சிகிச்சைக்காக அருகில் இருந்த மசூதியில் அவரை அனுமதித்த பொழுது. அங்கு வந்த தலிபான் பயங்கரவாதிகள், பத்திரிகையாளர் என தெரிந்தே சித்திக்கை கொன்று. பின்னர் அவர்களின் வெறிச்செயலை அரங்கேற்றியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.